For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பியைக் கலங்க வைத்த ரயில் விபத்து.. இதுவரை 100 பேர் பலி.. விபத்துக்கு காரணம் என்ன?

கான்பூர் அருகே பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

By Arivalagan
Google Oneindia Tamil News

கான்பூர்: பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் இந்த ரயில் இன்று அதிகாலையில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. தகவல் அறிந்து மீட்பு குழுக்கள், மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்தன.

Atleast 63 passenges dies asPatna - Indore exp rerails

விழுந்து கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றி அதற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இதுவரை 100 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடல்கள் வந்தவண்ணம் உள்ளன. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் பல உருக்குலைந்து போய் விட்டன. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்படுகிறது. ஒன்றின் மீது ஒன்றாக விழுந்து கிடப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெரும் சிரமமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வே விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில்தான் இது என்ன நிகழ்வால் ஏற்பட்டது என்பது தெளிவாகும்.

ஹெல்ப்லைன் எண்கள்:

விபத்து குறித்துத் தகவல் அறிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: ஜான்சி-05101072, ஓராய்-051621072, கான்பூர்- 05121072, பொக்ரயான்-05113-270239.

English summary
At least 63 passengers died after the Patna-Indore Express derailed newr Purkharayam in Kanpur on Sunday. The incident took place in the wee hours of Sunday. Medical teams have been rushed to the spot. Rescue work is underway in full seing. The death toll is likely to increase reports state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X