For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் மீண்டும் ஏடிஎம்-இல் 2000 ரூபாய் போலி நோட்டுக்கள்

டெல்லியில் மேலும் ஒரு வங்கி ஏ.டி.எம் -இல் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்ட சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லியில் மேலும் ஒரு வங்கி ஏ.டி.எம் -ல் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்ட சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்யிலிருந்து கடந்த மாதம் 6-ம் தேதி குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி 2 ஆயிரம் நோட்டுக்கள் இருந்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

ATM in Delhi contains fake 2000 rupees play notes again

இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்-இல் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் வைக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள அமர் காலனியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில், குழந்தைகள் பேங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம்களில் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் வருவது தொடர்கதையாகி இருப்பதால் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
ATM in south Delhi's Amar colony contains fake 2000 rupees play note with "Children Bank of India" printed in it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X