For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன்னி லியோன் விளம்பரம்... சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் தலைவர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்த ஆணுறை விளம்பரம் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அதுல் அன்ஜான் தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இந்தியாவிற்கு வந்த நடிகை சன்னி லியோனை பாலிவுட் பட உலகில் நடித்து வருகிறார். பாலிவுட் மட்டுமல்லாது, தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ள இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

காண்டம் விளம்பரம்

காண்டம் விளம்பரம்

சமீபத்தில் சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் ஒன்று வெளியானது. இந்த விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் அஞ்சான், "சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை, மக்கள் பார்க்க அனுமதித்தால் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இந்தியா போன்ற, மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில், ஆணுறை விளம்பரங்கள் தவிர்க்க முடியாதது; அதில் நடிக்கும் நடிகைகளை விமர்சிப்பது, கண்டனத்துக்குரியது' என, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சன்னிலியோன் வருத்தம்

சன்னிலியோன் வருத்தம்

இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை சன்னி லியோன், "மக்களின் சக்தியாக இருப்பவர்கள் என்னை விமர்சனம் செய்து தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவது எனக்கு வருத்தமாக உள்ளது. அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவ கவனம் செலுத்தலாம்" என கூறியதோடு இது குறித்து கம்யூனிஸ்ட் தலைவருக்கு அவர் ஒரு பகிரங்க கடிதமும் எழுதினார்.

மன்னிப்பு கேட்ட தலைவர்

மன்னிப்பு கேட்ட தலைவர்

இதையடுத்து, அதுல் அன்ஜான் கூறுகையில், ''ஆணுறை விளம்பரங்களுக்கு எதிரானவனாக, என்னை சித்தரிப்பது சரியல்ல. நான் தெரிவித்த கருத்து, யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அதேநேரத்தில், இதுபோன்ற ஆபாச விளம்பரங்களுக்கு தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவிப்பேன்,'' என்று கூறியுள்ளார்.

English summary
CPI leader Atul Anjan on Thursday said that "Sunny Leone's condom advertisements are vulgar and he would continue to oppose them". The CPI leader added that he is not anti-condom, but the language used in the advertisement is not right.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X