For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட 8.5% மழை குறைவுதான்... ஆனாலும் பாதிப்பில்லையாம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட 8.5% குறைவாக மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண மழையை விடவும் கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது, ஆனால் அந்த கணிப்பு இம்முறை பொய்யாகியுள்ளது.

இதனால் வேளாண்மைக்குத் தேவையான நீரில் குறைவோ, நதிநீர் தேக்கங்கள், கால்வாய்களில் தேங்கும் நீரின் அளவோ மாறப்போவதில்லை என்றாலும், உலக அளவில் ஏற்படும் வானிலை மாற்றங்களின் இந்திய பருவ மழை தாக்கங்களை கணிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய மாதிரிகள் போதாமையாக உள்ளன என்று தெரியவந்துள்ளது.

இரண்டு வருடம் தொடர்ந்து வறட்சிக்கு நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை, வழக்கத்தை விட 2 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. இதனால், நாட்டில் உள்ள மூன்று பங்கு மாவட்டங்களில் குறைந்தளவே மழை பெய்துள்ளது.

பருவமழை பற்றாக்குறை

பருவமழை பற்றாக்குறை

நாட்டில் உள்ள 614 மாவட்டங்களில், 610 மாவட்டங்களில் கிடைத்த தகவல்ப்படி,389 மாவட்டங்களில் சராசரி அல்லது அதிகப்படியான மழை பெய்துள்ளது. 221 மாவட்டங்கள் பற்றாக்குறை மழை பெய்துள்ளது. இதனால், மழை பற்றாக்குறையை சமாளிக்க செப்டம்பரில் நல்ல மழை பெய்ய வேண்டும்.

மழை அளவு

மழை அளவு

கடந்த 2013ல் ஜூன் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை வட 14 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதே இந்த காலகட்டத்தில் அதிகபட்ச மழையாக உள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் உள்ள 16 சதவீத பகுதியில் பற்றாக்குறையால் தவிக்கிறது.

மழை குறைந்த வட இந்தியா

மழை குறைந்த வட இந்தியா

வட இந்தியாவில் தான் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. கடந்த 2013க்கு பிறகு தற்போது 30 முதல் 40 சதவீத மழைப்பொழிவு பற்றாக்குறையாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் கேரளாவில் மழை குறைவாக பெய்துள்ளது.

அதிக மழை பொழிவு

அதிக மழை பொழிவு

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் வழக்கத்தைவிட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால், இந்த பகுதிகளில், 40 சதவீத பருப்பு வகைகள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. கரும்பு, பருத்தி ஆகியவை வழக்கத்தை விட 15 சதவீதம் குறைவாக பயிரிடப்பட்டுள்ளது.

கணிப்பு பொய்த்தது

கணிப்பு பொய்த்தது

உள்ளூர் மற்றும் சர்வதேச பருவநிலை மாற்றம் காரணமாக மத்திய இந்தியாவில் அதிகளவு மழை பெய்து வருவதும், மிதமான மழை பெய்வது குறைந்து வருகிறது. இந்திய வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை மையங்கள் கணித்ததை விட, 2016ல் பருவமழை காலத்தில், 610 மாவட்டங்களில் 221 மாவட்டங்களில் குறைந்தளவே மழை பெய்துள்ளது.

கடந்த ஆண்டை விட அதிகம்

கடந்த ஆண்டை விட அதிகம்

2012,14,15 வருடங்களை விட 16ல் நல்ல மழை பெய்துள்ளது. அதேநேரத்தில் 2011 மற்றும் 13 வருடத்தைவிட குறைந்தளவு மழை பெய்துள்ளது. 2011 மற்றும் 13ல் இந்தியாவில் நான்கு பங்கு மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது. 2016ல், மூன்று பங்கு மாவட்டங்கள் நல்ல மழை பெய்துள்ளது. 12 மற்றும் 14ல் 50 சதவீத மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பெய்துள்ளது.

கணித்ததை விட 8% குறைவு

கணித்ததை விட 8% குறைவு

ஆகஸ்ட் மாதம் நாட்டில் எப்போதும் இயல்பாக 26 செமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 4% கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் சகஜமான மழையை விட 8% குறைவாகவே பெய்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியா அது பெற வேண்டிய மழையின் அளவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

லா நினோ விளைவு

லா நினோ விளைவு

உலக பருவ நிலை முன் கணிப்புகள் அனைத்தும் எல் நினோவுக்கு எதிரான லா நினா விளைவு ஏற்படும் என்று கணித்துள்ளதால் இந்தியாவுக்கு அதிக மழை உண்டு என்றே கூறப்பட்டது. ஆனால் இதுவரை லா நினா விளைவு பலவீனமாகவே உள்ளது.

மழை குறைவு ஏன்?

மழை குறைவு ஏன்?

தெற்கில் மழையின் அளவு குறையும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை, மேலும் லா நினா விளைவை ஊக்குவிக்கும் பிற காரணிகளும் சரிவர கூடி வராததால் மழை குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் டி.எஸ்.பய் கூறியுள்ளார்.

தப்பிய கணிப்பு

தப்பிய கணிப்பு

2014 மற்றும் 2015 தொடர் வறட்சி வலுவான எல் நினோவினால் ஏற்பட்டது. ஆனால் 2016 எல் நினோ விளைவு மறைந்து லா நினா ஏற்படுவதால் மழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் கணித்தை விட ஆகஸ்டில் குறைவாகவே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Contrary to expectations, rainfall across the country was 8.5% less than normal in August, with the monsoon system weakening in the second half of the month, particularly in south India and the northeast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X