India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அத்தையுடன்".. அடங்காத இளைஞர்.. தோட்டத்தில் நடந்த கொடுமை.. ஒட்டகத்தில் தொங்கிய சடலம்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: இந்த கள்ளக்காதல், ஊர்விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு பரவி கொண்டிருக்கிறது.. அதுவும் ஒரு வரைமுறையே இல்லாமல்.. இதனால் கொலைகளும், தற்கொலைகளும் பெருகி கொண்டிருப்பது வேதனையை தந்து வருகிறது.

வடமாநிலங்களில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறை அட்டகாசங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே காணாமல் போய் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இதை பலமுறை எடுத்துரைத்தும், மாநில அரசுகள் பாலியல் குற்றங்களை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை..

உச்சிக்கு ஏறிய காமம்.. 66 வயது பாட்டி.. தண்ணி அடிப்பாராம்.. கள்ளக்காதல் வேறு.. கடைசியிலே பாருங்கஉச்சிக்கு ஏறிய காமம்.. 66 வயது பாட்டி.. தண்ணி அடிப்பாராம்.. கள்ளக்காதல் வேறு.. கடைசியிலே பாருங்க

அட்டகாசங்கள்

அட்டகாசங்கள்

பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் அக்கிரமம் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்தும் அநியாயங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. அப்படித்தான் ராஜஸ்தானிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது..பினாகரை சேர்ந்தவர் பெயர் உத்ரம் மேக்வால்.. மனைவி பெயர் கௌரா தேவி.. இவர்களது உறவினர் குஷன் ராம்.. அதாவது இவரது அத்தைதான் கௌரா தேவி.. ஆரம்பத்தில் பெரிதாக இல்லாவிட்டாலும், நாளடைவில் குஷல் ராமுக்கு தன்னுடைய அத்தையின் மீது ஈர்ப்பு வர ஆரம்பித்து விட்டது.

அத்தை

அத்தை

இதனால், வயதில் மூத்தவர் என்றும் பாராமல், அத்தை என்றும் பாராமல் நெருங்கி பழகினார்.. இவர்தான் இப்படி வயசு கோளாறில் புத்தி தடுமாறி போகிறார் என்றால், அந்த அத்தையும் இதற்கு உடன்பட்டு உள்ளார்.. இவர்களின் கள்ளக்காதலும் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்துள்ளது.. மாமா வீட்டில் இல்லை என்றாலே, குஷல் ராமுவுக்கு குஷியாகிவிடுமாம்.. இருவரும் வெளியிடங்களுக்கும் சென்று, தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

 கள்ள உறவு

கள்ள உறவு

ஒருநாள் மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.. இறுதியில் அந்த கள்ளக்காதல் விஷயத்தை அறிந்து கொந்தளித்து போய்விட்டார் மாமா.. மனைவியை கண்டித்தார்.. எச்சரித்தார்.. கெஞ்சிப் பார்த்தார். எதையுமே அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இதனால், ஆத்திரம் முழுக்க குஷல்ராம் மீது மாமாவுக்கு திரும்பியது.. இதனால், குஷல்ராமை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.. அதன்படி, சம்பவத்தன்று தன்னுடைய தோட்டத்துக்கு வருமாறு குஷல்ராமை அழைத்து சென்றார் மாமா.. அந்த தோட்டத்திலேயே வைத்து கொடூரமாக அடித்து கொலையும் செய்துவிட்டார்.

ஒட்டகம்

ஒட்டகம்

அதற்கு பிறகு, சடலத்தை எடுத்து ஒட்டகத்தின் மீது வைத்து கட்டி, கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் கொண்டு போய் வீசினார்.. காலை நேரத்தில், குஷல்ராம் சடலமாக ரோட்டோரம் விழுந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அலறினர்.. போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.. அவர்களும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.. மாமா மீது சந்தேகம் வந்ததால், அவரையும் பிடித்து விசாரித்தனர்.. இறுதியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.. இறுதியில், உத்ரம் மேக்வாலை போலீசார் கைது செய்தனர்..

 அத்தை தந்த ஷாக்

அத்தை தந்த ஷாக்

இதனிடையே, கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பது தெரிந்ததுமே, அத்தையால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. பிரிந்து வாழவும் விருப்பமில்லை.. அதனால், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் அத்தை.. இந்த தகவலறிந்த போலீசாரும், ரயில்வே தண்டவாளத்தில் சிதறி கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதும், இதை கேள்விப்பட்டு அத்தை தற்கொலை செய்து கொண்டதும், பினாகர் பகுதியையே பீதிக்குள்ளாக்கி வருகிறது.

English summary
aunty commits suicide due to boyfriends murder near rajasthan and what happened actually கள்ளக்காதலன் இறந்துவிட்டதால், அத்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X