For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை கொல்ல ஆயுதம் கடத்தல்.. தீவிரவாதி அபு ஜிண்டாலுக்கு ஆயுள் சிறை! மும்பை கோர்ட் தீர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: ஆயுதங்கள் கடத்திய வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அபு ஜிண்டாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சக குற்றவாளிகளுக்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், 2006ல், இரண்டு கார்களில், பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன. போலீசார் நடத்திய சோதனையில், ஒரு வாகனம் பிடிப்பட்டது. அதில், 30 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிபொருள், 10 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3,200 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Aurangabad arms haul case: abu jundal and 6 gets life term

மற்றொரு வாகனத்தை ஓட்டிச் சென்ற, தீவிரவாதி சையது ஜபியுதீன் அன்சாரி என்கிற அபு ஜிண்டால், தப்பி ஓடிவிட்டான். மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அபு ஜிண்டால், வங்கதேசம் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றான்.

இதனிடையே, சவுதி அரேபியாவில் இருந்து, 2012ல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் அபு ஜிண்டால். அவுரங்காபாத்தில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக, அபு ஜிண்டால் உட்பட, 22 பேர் மீது, மஹாராஷ்டிரா திட்டமிட்ட குற்ற நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு சட்ட சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய, இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில், அபு ஜிண்டால் உட்பட, 12 பேர் குற்றவாளிகள் என, சிறப்பு கோர்ட் கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அபு ஜிண்டால் மற்றும் 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. இரு குற்றவாளிகளுக்கு தலா 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 குற்றவாளிகளுக்கு தலா 8 வருட சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றுள்ள 12 பேரின் பெயர் விவரம்: அபு ஜிண்டால், அஸ்லாம் காஷ்மீரி, பைசல் அடவுர்-ரஹ்மான் ஷெயிக், அப்ரோஸ் கான் ஷாகித் பதான், சையது ஆகிப் ஜப்ருத்தின், பிலால் அகமது அப்துல் ரசாக், மெடிகோ ஷெரிப் அகமது, அப்சல் நபி கான், முஸ்தான் அகமது இசாப் ஷெயிக், ஜாவீத் அப்துல் மஜித், முசாபர் முகமது தன்வீர் மற்றும் முகமது அமீர் ஷகில் அகமது.

ஆதாரங்கள் இல்லை என்பது போன்ற காரணங்களுக்காக வழக்கில் இருந்து 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம்: முகமது ஜுபேர் சையது அன்வர், அப்துல் ஆசிம் அப்துல் ஜலில், ரியாஸ் அகமது ரம்சான், காதிப் இம்ரான் அகில் அகமது, விகார் அகமது நிசார் ஷெகிய், அப்துல் சமத் சம்ஷேர் கான், முகமது அகில் இஸ்மாயில் மொமின் மற்றும் பைரோஸ் தஜுத்தின் தேஷ்முக்.

English summary
Aurangabad arms haul case: abu jundal and 6 gets life term. 2 convicts sentenced to 14 years of jail, 3 sentenced to 8 years of jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X