For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே!

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகண்டில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதால் பூரிப்படைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர் பதவியேற்கும் வரை இலவச பயணத்துக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 352 இடங்களில் வெற்றி வெற்றது.

இதையடுத்து ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு கோரினார். ஜனாதிபதியும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அவர் வரும் 30-ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்.

என்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி? என்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி?

பயணிகள்

பயணிகள்

இந்த நிலையில் மோடியின் மீதுள்ள அன்பால் உத்தரகாண்ட மாநிலம் ஹால்ட்வானியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜமுனா பிரதாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மோடி பதவியேற்கும் வரை தனது ஆட்டோவில் பயணிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

எல்லா மக்கள்

எல்லா மக்கள்

இதுகுறித்து அவர் கூறுகையில் பிரதமராக மோடி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளதால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் எல்லா பிரிவு மக்கள் குறித்தும் பேசினார்.

ஒரு நாளைக்கு ரூ 1000

ஒரு நாளைக்கு ரூ 1000

130 கோடி குடிமகன்களை ஒன்றிணைத்தார். எனவே மோடியின் மீதுள்ள அன்பால் அவர் பதவியேற்கும் வரை பயணிகளுக்கு ஆட்டோவில் இலவச பயணத்தை அறிவித்துள்ளேன் என்றார். ஒரு நாளைக்கு 1000 ரூ சம்பாதித்து வந்த நிலையில் நேற்று முதல் 30-ஆம் தேதி மாலை வரை ஜமுனா பிரசாத் அறிவித்துள்ள இலவச பயணத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாதனை

சாதனை

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்று தனிபெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு இதுபோல் சாதித்துள்ளார்.

English summary
Auto driver Jamuna prasad offers free rides till Modi swearing in as PM in Uttarkhand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X