For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே ஒரு அவியல் போட்டோவால் நொந்து நூடுல்ஸ் ஆகும் கேரள சுற்றுலாத்துறை!

அவியல் புகைப்படத்தை வெளியிட்டதால் கேரள சுற்றுலாத்துறை கேலிக்கு ஆளாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவின் பாரம்பரிய உணவான அவியல் குறித்து அம்மாநில அரசு வெளியிட்ட புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு மாநிலதிற்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதிலும் உணவு என்று வந்துவிட்டால், ஒவ்வொரு மாநிலதிற்கு ஒவ்வொரு வகையான உணவு முறைகள் இருக்கும். அதை சுவைத்து சாப்பிடுவதே அலாதியான விஷயம்.

குறிப்பாக உணவுப்பிரியர்கள் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் பாரம்பரிய பதார்த்தத்தை தேடி சென்று சாப்பிடுவார்கள். அதுவும் சுற்றுலா தளங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கள் ஊரில் இது பேமஸ், அது பேமஸ் என கூவிக்கூவி விற்பார்கள்.

அவியல் படம்:

அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு தான் சிக்கலில் மாட்டியிருக்கிறது கேரள அரசின் சுற்றுலாத் துறை. தங்கள் ஊரின் பாரம்பரிய உணவான அவியலின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது கேரள சுற்றுலாத்துறை.

விமர்சனம்:

விமர்சனம்:

அவ்வளவு தான் சிக்குனான்டா சீதக்காதி என வரிந்துகட்டிகொண்டு வந்துவிட்டார்கள் மலையாள மக்கள். அந்த புகைப்படத்தை சகட்டு மேனிக்கு விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுடைய விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி தவிக்கிறது கேரள சுற்றுலாத்துறை.

தக்காளி:

தக்காளி:

அப்படி என்ன தான் அந்த புகைப்படத்தில் தப்பிருக்கிறது என கேட்கிறீர்களா? பெரிய விஷயம் எல்லாம் எதுவும். அவியல் கிண்ணத்திற்குள் சில தக்காளித் துண்டுகள் கிடக்கிறது. அதோடு, காய்கறிகள் வேகவைக்கப்படவில்லை என்பதும், சாலட் போலவும் அது தோற்றமளிக்கிறது.

தக்காளிப் பிரச்சினை:

தக்காளிப் பிரச்சினை:

ஒரேயொரு தக்காளி இருந்தது இத்தனை பிரச்சினைக்கு காரணம். அவியல்ல எப்படா தக்காளி போட்டாங்க என விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து சுற்றுலாத்துறையை கேள்வி மேல் கேள்வி கேட்டு சுற்றவிட்டு ரசித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

English summary
A photo of Avial creates furore in Kerala, which was posted by its tourism department in its twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X