For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய்க்கிழமை.. கார்த்திகை பவுர்ணமி.. கூடவே அயோத்தி தீர்ப்பு.. திரண்டு வர போகும் ராம பக்தர்கள்

அயோத்தியில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் நிறைய பேர் கூட உள்ளனர்

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தி தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அதே கால கட்டத்தில் அதாவது அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அயோத்தியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடவுள்ளனர். இதனால் அயோத்தி மீது அத்தனை பேரின் பார்வையும் திரும்பியுள்ளது.

அயோத்தி தீர்ப்பு வரும் நிலையில் தங்களது தொண்டர்கள் அடக்கமாக இருக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தூண்டும் வகையிலோ அல்லது சர்ச்சைக்கிடமாகவோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் அயோத்தியில் ராம பக்தர்கள் திரளவுள்ளனர்.

Recommended Video

    Section 144 Imposed In Ayodhya

    அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் விசாரணை அக்டோபர் 16ம் தேதி முடிவடைந்தது. அடுத்த வாரம் வாக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு விதமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அயோத்தி தொடர்பாக வரும் தீர்ப்பை மத்திய பாஜக அரசு முறைப்படி அமல்படுத்த வேண்டும், அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரி வருகின்றனர்.

    நெட்டிசன்களே உஷார்.. அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் நெட்டிசன்களே உஷார்.. அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும்

    திரண்டு வர உள்ளனர்

    திரண்டு வர உள்ளனர்

    இந்த நிலையில் இன்னொரு பரபரப்பாக அயோத்தியில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளவுள்ளனர். இதுவும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கார்த்திகை பவுர்ணமி விழா நடைபெறவுள்ளது. அதே சமயத்தில் அயோத்தி தீர்ப்பும் வரவுள்ளதால் இங்கு லட்சக்கணக்கில் துறவிகள், ராம பக்தர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பவுர்ணமி

    பவுர்ணமி

    கார்த்திகை பவுர்ணமியையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவின்போது சரயு நதியில் புனித நீராடி வணங்க பக்தர்கள் திரள்வார்கள். இந்த நதியானது அயோத்தி வழியாக செல்கிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் இங்கு வருகை தந்தனர். இந்த முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம்

    மாவட்ட நிர்வாகம்

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இப்போதே திட்டமிட ஆரம்பித்து விட்டது உத்தரப் பிரதேச மாநில அரசு. பதட்டமான பகுதிகளில் போலீஸாரைக் குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்திக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதள பதிவுகளையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதற்கிடையே, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் இல்லத்தில் இந்து, முஸ்லீம் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்திற்குப் பின்னர் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்க வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    English summary
    ayodhya to witness lakhs of devotees next week as sc court verdict on land dispute nears and Strong security arrangements are being made
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X