For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சில் கவனம் முக்கியம்.. அமித் ஷாவுடன் நடந்த மீட்டிங்.. செய்தி தொடர்பாளர்களுக்கு பாஜக அறிவுரை!

அயோத்தி வழக்கு தொடர்பான விவாதங்களின் போது கவனமாக பேச வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பான விவாதங்களின் போது கவனமாக பேச வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.

    அயோத்தி வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்குள்ள சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

    தீர்ப்பு எப்படி

    தீர்ப்பு எப்படி

    இந்த நிலையில் இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. பாஜக தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    தேசிய தலைவர் அமித் ஷா

    தேசிய தலைவர் அமித் ஷா

    அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கட்சி உறுப்பினர்களை கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் உடன் அமித் ஷா இன்று காலை ஆலோசனை செய்தார். அதேபோல் தீர்ப்பிற்கு பின்பும் இவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

    செய்தி தொடர்பாளர்

    செய்தி தொடர்பாளர்

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கட்சியின் செய்தி தொடர்பாளர்களுடன் 30 நிமிடம் நேரம் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பு எப்படி வந்தால் எப்படி பேச வேண்டும். எதை தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டும், சர்ச்சை ஏற்படாமல் எப்படி இருப்பது, விவாதங்களில் எப்படி கவனமாக இருக்க வேண்டும், என்று பல விஷயங்களை அமித் ஷா அறிவுறுத்தி இருக்கிறார்.

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    தீர்ப்பிற்கு பின் அரசியல்வாதிகள் பேசும் சிறு சிறு கருத்துக்கள் கூட அதிக கவனம் பெறும். அதனால் பாஜகவினர் மிக கவனமாக இருக்கும்படி கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் பாஜக சார்பாக அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் இதே கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Ayodhya Verdict: Amit Shah meets party spokespersons at this residence about TV debates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X