For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி முதல் கர்தார்பூர் வரை.. ஒரே நாளில் நடக்கும் 3 முக்கிய விஷயங்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு!

அயோத்தி வழக்கில் வழங்கப்படும் தீர்ப்புடன் சேர்த்து இன்று இந்தியாவில் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாளில் நடக்கும் 3 முக்கிய விஷயங்கள்... நாடு முழுவதும் பரபரப்பு

    டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புடன் சேர்த்து இன்று இந்தியாவில் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். இந்தியாவின் இறையாண்மையை பறைசாற்றும் நாளாக இன்று இருக்க போகிறது. எதிர்காலத்தில் இந்த நாளை வரலாறு கண்டிப்பாக நினைவு கூறும்.

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு, கர்தார்பூர் வழி தட திறப்பு விழா, திப்பு ஜெயந்தி என்று மூன்று முக்கியமான, மத ரீதியிலான சம்பவங்கள் இன்று நடக்க உள்ளது. இதனால் நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கர்தார்பூர் ஏன்?

    கர்தார்பூர் ஏன்?

    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் வழி தடத்தை திறக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. இதில் இந்தியா பக்கம் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை நாளை பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதேபோல் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 9ம் தேதி திறக்க உள்ளார்.

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தன்னுடைய கடைசி காலத்தில் கர்தார்பூர் பகுதியில்தான் வாழ்ந்தார். இதனால் கர்தார்பூர் பகுதியில் எல்லா வருடமும் தர்பார் சாஹிப் என்ற பெயரில் விழா நடத்தப்படும். இங்கு செல்வது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்று. ஆனால் இதற்கு சரியான பாதை இல்லாததாலும், விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்ததாலும் அடிக்கடி விழா பாதிக்கப்பட்டது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இதனால் கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. கர்தார்பூர் வழித்தடத்தை கடந்த ஒரு வருடம் முன் கட்ட தொடங்கி தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் இந்தியர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பஞ்சாப் உறவு

    பஞ்சாப் உறவு

    இன்று பஞ்சாப்பில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தியா பாகிஸ்தான் உறவில் இந்த வழித்தடம் புதிய பாலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் இந்த விழா மீது தங்கள் கவனத்தி திருப்பி உள்ளனர் .

    திப்பு ஜெயந்தி

    திப்பு ஜெயந்தி

    இந்த இன்னொரு பக்கம் கர்நாடகாவில் மிக முக்கியமான விஷயமான, திப்பு ஜெயந்தி இன்று நடக்கிறது. அரசு விழாவாக நடத்தப்பட்டு இந்த விழாவை, பாஜக அரசு இந்த முறை கொண்டாட முடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் இஸ்லாமிய மக்கள், இந்த விழாவை கொண்டாடி பழக்கப்பட்ட மக்கள் இன்று இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.

    கர்நாடகா எப்படி இருக்கிறது

    கர்நாடகா எப்படி இருக்கிறது

    திப்பு சுல்தானுக்காக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடகாவில் மத ரீதியில் அதிக உணர்ச்சிகரமான விழாவாக பார்க்கப்படுகிறது. அதனால் கர்நாடகாவில் தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

    அயோத்தி வழக்கு

    அயோத்தி வழக்கு

    இந்த நிலையில்தான் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று வழங்கப்படும் தீர்ப்பில் தெரிந்துவிடும்.

    முக்கியமான நாள்

    முக்கியமான நாள்

    இந்த வழக்கு இந்தியா வரலாற்றில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மூன்று முக்கியமான விஷயங்கள் இப்படி இந்தியாவில் ஒரே நாளில் நடக்கிறது. இதனால் நாடு முழுக்க அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ayodhya Verdict, Tippu Jayanti and Kartharpur corridor ceremony falls under the same day, today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X