For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 3 மாதம்தான்.. எல்லோரின் பார்வையும் அமித் ஷா மீதுதான்.. அடுத்து என்ன முடிவு எடுப்பார்!?

அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

    1045 பக்கங்கள்.. அயோத்தி தீர்ப்பு நகலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்1045 பக்கங்கள்.. அயோத்தி தீர்ப்பு நகலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

    அனுமதி

    அனுமதி

    அயோத்தி வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு பெற்றுள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு வழங்கப்படவேண்டும்.அவர்கள் அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடலாம், என்றுள்ளனர்.

    என்ன சொல்கிறது

    என்ன சொல்கிறது

    அதேபோல் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் இது தொடர்பான ஒரு திட்டத்துடன் மத்திய அரசு தயாராக வேண்டும். அதுமட்டுமின்றி, ராமர் கோவில் கட்டும் பணிகளை மத்திய அரசு மேற்பார்வையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    3 மாதத்திற்குள்

    3 மாதத்திற்குள்

    இதனால் இன்னும் 3 மாதத்திற்குள் அயோத்தியில் அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கும் என்று கூறுகிறார்கள். நீதிமன்றமே மூன்று மாதம் அவகாசம் கொடுத்துள்ளது. இதனால் அதற்குள் பாஜக சரியான திட்டத்தை வகுக்கும் என்கிறார்கள்.

    எல்லோரின் பார்வை

    எல்லோரின் பார்வை

    தற்போது எல்லோரின் பார்வையும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா பக்கம் திரும்பி இருக்கிறது. அமித் ஷா என்ன செய்வார்? அயோத்தி குறித்து என்ன பேசுவார்? ராமர் கோவிலுக்கான பணிகள் எப்போது தொடங்கும் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    அடுத்து என்ன நடக்கும்

    அடுத்து என்ன நடக்கும்

    இது தொடர்பாக விரைவில் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அயோத்தியில் மிகப்பெரிய அளவில் கோவில் கட்ட பாஜக திட்டமிட்டு இருந்தது. அதற்கான பணிகளை எப்போது வேண்டுமானாலும் அக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ayodhya: What will be the move of BJP national chief Amit Shah after Historical Verdict?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X