For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் கிராமிய கலைகளை பறைசாற்றியபடி வந்த அய்யனார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மெய்சிலிர்க்க வைத்த முப்படை அணிவகுப்பு

    டெல்லி: டெல்லியில் இன்று நடந்த குடியரசுத் தினவிழாவில் தமிழக காவல் தெய்வமான அய்யனார் தப்பாட்டம், கரகாட்டம், என கிராமிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    நாட்டின் 71வது குடியரசு தின விழா ,இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து , முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

     ayyanar Statue on delhi republic day celebration : Tamil Nadu showcases Gramiya kalai

    அதன்பின்னர் நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் ராணுவ தளவாடங்கள் பீரங்கிகள், ஏவுகணைகள் பங்கேற்றன. அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம்-77 ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் என்ற நவீன ஆயுதம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான டிரெயின் 18 மற்றும் புல்லட் ரயில்களின் மாதிரிகள், உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படும் ஏ.என். 32 விமானம், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.

     ayyanar Statue on delhi republic day celebration : Tamil Nadu showcases Gramiya kalai

    விழாவில் எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படையின் அணிவகுப்பு நடந்தது. செயற்கைகோள் எதிர்பபு ஏவுகணை சக்தி இடம் பெற்றது. ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம் பெற்றது.

    குடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம் குடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம்

    தமிழக காவல் தெய்வம் அய்யனார் சிலையுன் தமிழக ஊர்தி தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் நாதஸ்வரம் தவில் இசை உள்பட கிராமிய கலைகள் முழங்க கம்பீரமாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தது.. ராஜஸ்தான், தெலுங்கானா மாநில வாகனங்களும் அணிவகுப்பில் தங்கள் கலாச்சாரததை பறைசாற்றும் வகையில் வந்தது பார்வையாளர்களை ஈர்த்தது.

    அஸ்ஸாம், இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்பட 22 மாநிலங்களின் கலாச்சாரததை பறைசாற்றும் வகையில் வாகன ஊர்திகள் இடம் பெற்றன. ஒவ்வொரு மாநிலத்தின் ஊர்திகளும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய சின்னங்களுடன் வந்தன.

    English summary
    Republic day: Tamil Nadu showcases Gramiya kalai(Folk Arts) of Tamil People, along with Ayyanar Statue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X