For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமாஸ் பண்ணுங்க..'மனநிலை' சரியாகிடும்- பா.ஜ.க. எம்.பி. யோகிக்கு உ.பி. அமைச்சர் ஆசாம் கான் அட்வைஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

ராம்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.பி. யோகி ஆதித்யநாத் தன்னுடைய மனநிலையை கட்டுப்படுத்திக் கொள்ள இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு முறையான நமாஸை பின்பற்றலாம் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆசாம் கான் கூறியுள்ளார்.

யோகாசனத்தை பிற மதத்தினரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியிருந்தது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆசாம் கான் கூறியுள்ளதாவது:

Azam Asks Yogi Adityanath to Offer Namaz for Better Mental Health

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு மதத்தின் வழிபாட்டு முறை. அதை பிற மதத்தினர் மீது கட்டாயமாக திணிக்கக் கூடாது;

யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறையாக 'நமாஸை' செய்ய வேண்டும்... அவர் எங்கள் மீது சூரிய நமஸ்காரம், யோகாவை திணிப்பதால் நாங்களும் கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமை உருவாகிறது.

இப்படி நமாஸ் செய்வதால் உடல் வலிமை மட்டுமல்ல.. அவரது மனநிலையில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு ஆசாம் கான் கூறியுள்ளார்.

English summary
Reacting on the recent comments by BJP MP Yogi Adityanath on Yoga, UP minister Azam Khan today said that the saffron leader should "offer namaz to set his mind on the right track".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X