For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம்கள் தங்களை மதசார்பற்றவர்கள் என்று நிரூபித்துவிட்டனர்: உ.பி அமைச்சர் ஆசம்கான் பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: நரேந்திரமோடி ஆட்சி அமைய வாய்ப்பளித்ததன் மூலம், முஸ்லிம்கள் தங்களை மதசார்பற்றவர்கள் என்று நிரூபித்துள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில நகர வளர்ச்சி துறை அமைச்சர் ஆசம்கான் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ராம்புர் நகரில், நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆசம் கான் நிகழ்சியொன்றில் பேசுகையில் "இந்தியாவில் வாழும் முஸ்லிம் இன மக்கள் உடைந்த மனதுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நாட்டை ஆட்சி செய்யும் நபர் முஸ்லிம்கள் வளர்ச்சி அடைவதை விரும்பவில்லை.

ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் பேசிய பாஜகவின் கிரிராஜ் சிங், நரேந்திர மோடியை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியே அரசு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசு, அவர்கள் எப்படி போக வேண்டும் என்பது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

மோடி தலைமையிலான அரசு அமைய முஸ்லிம்கள் அளித்த வாக்கும் காரணம். இதன்மூலம், முஸ்லிம்கள் தங்களை மதசார்பற்றவர்கள் என்று காண்பித்துவிட்டனர். பாஜக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிதான் முஸ்லிம்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஏனெனில் முஸ்லிம்களுக்கு யாரையும் தோற்கடித்தாக வேண்டும் என்ற இலக்கு இல்லை. எனவே யார் நல்ல வாக்குறுதிகளை அளித்தார்களோ அவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

English summary
Suggesting that Muslims have contributed to Narendra Modis victory in the 2014 Lok Sabha elections, SP leader Azam Khan, who had indulged in a vitriolic attack on the BJP leader, said they had proved that they were a "secular" community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X