For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.2000 கோடியாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் மூலம் மக்கள் தினமும் பயன்படுத்தும் சத்துமாவு, சோப்புகள், ஷாம்பு, தோல் பூச்சு கிரீம்கள், பிஸ்கட்டுகள், நெய், ஜூஸ், தேன், மசாலா பொருட்கள், சர்க்கரை, கடுகு எண்ணெய், பேஸ்ட் உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

பதஞ்சலி ஆயுர்வேத, பொருட்கள் உற்பத்தி நிறுவனம்,கடந்த ஆண்டு ரூ 1200 கோடி.யை தனது விற்பனையில் ஈட்டி உள்ளது. நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baba Ramdev expands empire beyond yoga

இது கடந்த நிதியாண்டை விட 67 சதவீத உயர்வு ஆகும். 2012ம் ஆண்டுவாக்கில், பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்வதற்கு என்ற பிரத்யேக கடைகள், நாடு முழுவதும், 150 முதல் 200 வரையில் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த கடைகளின் எண்ணிக்கை, 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அதிவேகமாக வளர்ந்து, வெளிநாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. வெளிநாட்டு பொருட்களை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்து பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Baba Ramdev's brands seem to have scaled up quite rapidly. For fiscal 2014, Patanjali Ayurved, the company that manufactures the products, clocked a turnover of about Rs 1,200 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X