For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளைஞரை கடத்தியதாக ராம்தேவ் சகோதரர் மீது புகார்

By Mathi
Google Oneindia Tamil News

Baba Ramdev in fresh trouble as brother accused of kidnap and assault
ஹரித்வார்: யோகா குரு பாபா ராம்தேவ் சகோதரர் ராம்பரத் இளைஞர் ஒருவரை கடத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த நிதின் தியாகி என்ற இளைஞரை தாக்கி ஹரித்வாரில் உள்ள ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைத்துள்ளதாக போலீசில் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் பதஞ்சலி யோகா பீடத்துக்கு சென்று அந்த இளைஞரை மீட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் பதஞ்சலி யோகா பீடம் முன்பு ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது ராம்தேவின் சகோதரர் ராம்பரத் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் இந்த புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியினரே இருப்பதாகவும் காங்கிரஸின் சதியால்தான் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
Noted yoga guru Baba Ramdev is in fresh trouble as Ramdev's former aide Naresk Malik was rescued from Patanjali ashram in Haridwar after he was allegedly kidnapped and assaulted by Ramdev's brother Rambharat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X