For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: யோகா குருவான பாபா ராம்தேவ் பிரதமர் மோடிக்கு ஆதரவாக புதிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர் பாபா ராம்தேவ். ஆனால் கடந்த சில மாதங்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதிலிருந்து சற்று விலகியே இருந்தார்.

இந்நிலையில் தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி மீண்டும் யூ டர்ன் எடுத்து பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர், ஜெய்ப்பூர் ஊரக மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு வாக்களிக்க ஆதரவாக பிரச்சாரம் செய்த பாபா ராம்தேவ், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று பேசினார். மேலும் பேசிய அவர் நாட்டின் பாதுகாவலரான மோடியை பாரத மாதாவின் பெருமை என்று கூறலாம்.

Baba ramdev u turn : support again modi and calls vote for BJP

குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்ய காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதி பொய்யானது என சாடிய பாபா ராம்தேவ், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபர்களை வாக்குரிமை மூலம் தண்டிக்க இதுவே சரியான தருணம் என்றார். ராஜ்யவர்த்தன் ராத்தோர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக பிராணாயாமம் செய்ய கூறினார் பாபா ராம்தேவ் .ஏனெனில் போர்களத்திற்கு செல்லும் ஒருவருக்கு பிராணாயாமம் மிகுந்த உதவியாக இருக்கும் என கூறினார்

சில மாதங்களுக்கு முன் பாபா ராம்தேவிடம் மக்களவை தேர்தலின் போது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என கேட்ட போது அதற்கு அவர் நான் ஏன் ஒரு கட்சியை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறேன். நான் அரசியல் ரீதியாக விலகிவிட்டேன். நான் அனைத்துக் கட்சிகளுடனும் இருக்கிறேன் என்று பல பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் செல்வாக்கு கொண்டவர்கள் மிகுந்த கூட்டத்தில் கூறினார்.

மோடி கேமரா வச்சுட்டார்.. காங்.குக்கு போட்டா சிக்கிருவீங்க.. என்ன இப்படி பேசிட்டார் பாஜக தலைவர்!மோடி கேமரா வச்சுட்டார்.. காங்.குக்கு போட்டா சிக்கிருவீங்க.. என்ன இப்படி பேசிட்டார் பாஜக தலைவர்!

மேலும் கடந்த டிசம்பர் மாதம் மக்களவை தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த பாபா ராம்தேவ், அடுத்த பிரதமர் யார் என்பது கணிக்க முடியாதபடி நிலைமை இருக்கும் என்றார். இது பிரதமர் மோடிக்கு மிகபொிய அவமதிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பார்கக்ப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Yoga guru Baba Ramdev gave new opinions and support to Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X