For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக மீண்டும் வரும் கிம்போ.. பாபா ராம்தேவ் உறுதி.. பல பலே திட்டம்

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக வெளியிட்ட ஆப்பை மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியிட முடிவெடுத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக கிம்போ..களமிறங்கிய பதஞ்சலி..வீடியோ

    டெல்லி: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக வெளியிட்ட ஆப்பை மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியிட முடிவெடுத்துள்ளது.

    தற்போது மொபைல் பயனாளிகளை, இளைஞர்களை பதஞ்சலி நிறுவனம் குறி வைத்துள்ளது. இதற்காக ஆண்ட்ராய்ட் ஆப்களை வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது. அதன்பின் இன்னும் வரிசையாக நிறைய ஆண்ட்ராய்ட் ஆப்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    ஆப் வெளியானது

    ஆப் வெளியானது

    சில வாரங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு போட்டியாக கிம்போ என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வெளியிட்டது. பார்க்க இந்த கிம்போ அச்சு அசலாக மருவைத்த வாட்ஸ் ஆப் போலவே இருந்தது. இதை சிலர் நூறு பேர் டவுண்லோடும் செய்தனர். வந்த முதல்நாளே பல காரணங்களால் வைரலானது.

    உடனே நீக்கப்பட்டது

    உடனே நீக்கப்பட்டது

    கிம்போ என்றால் சமஸ்கிருதத்தில் வாட்ஸ் ஆப் என்று பொருள்படும். ஆனால் இந்த கிம்போ இரண்டு நாட்களுக்குள் ''அம்போ'' என்று பிளே ஸ்டார் இயங்குதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்டது. வாட்ஸ் ஆப்பின் மாடலை காப்பியடித்தது, பயனாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது என்று வரிசையாக பல காரணங்கள் கூறப்பட்டதால் உடனடியாக நீக்கப்பட்டது.

    மீண்டும் வெளியாகும்

    மீண்டும் வெளியாகும்

    இந்த ஆப் மீண்டும் வெளியாக உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புதுப்பொலிவுடன் கிம்போ வெளியாகும். இதற்காக பல கோடியை செலவு செய்ய பதஞ்சலி நிறுவனம் தயாராக இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக அதைவிட பல வசதியை கொண்டு இந்த ஆப் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    பலர் உழைக்கிறார்கள்

    பலர் உழைக்கிறார்கள்

    இதற்கு பின் பலர் உழைத்துக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். பெரிய நிறுவனங்களில் படித்த வேலை செய்த, கம்பியூட்டர் பொறியாளர்களை இந்த புதிய ஆப்பை வடிவமைக்க பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பழையபடி இல்லாமல் அதிக பாதுகாப்புடன் இந்த ஆப் வெளியாகும் என்று பாபா கூறியுள்ளார்.

    English summary
    Baba's Patanjali plans to release Kimbho once again with new updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X