For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பு.. குக்கருக்குள் மாட்டி கொண்ட குழந்தை.. பாத்திரம் ரிப்பேர் பண்றவர் வந்து மீட்டதால் நிம்மதி!

குக்கருக்குள் குழந்தையின் தலை சிக்கி கொண்டது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: இந்த கொடுமையை பார்த்தீங்களா.. குக்கருக்குள்ளே குழந்தை மாட்டிக் கொண்டது.. விளையாட்டு ஒன்று விபரீதமாகி உள்ளது.. கடைசியில் பாத்திரம் ரிப்பேர் பண்றவர் வந்து அந்த குழந்தையை காப்பாற்றி உள்ளார்.

குஜராத் மாநிலம் பவா நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இங்கு ஒரு வீட்டில் பெற்றோர் இருந்துள்ளனர்.. அப்போது அவர்களது ஒரு வயது பெண் குழந்தை குக்கரை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் எதிர்பாராதவிதமாக குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது.

 baby head gets stuck in the cooker near gujarat

திடீரென குழந்தை அலறலை கேட்டபிறகுதான் பெற்றோர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த குக்கரை உடனே வெளியே எடுக்க பார்த்தனர்.. அவர்களால் முடியவில்லை.. அதனால் உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்தனர்.. அவர்களும் ஓடிவந்து தலையில் சிக்கியிருந்த குக்கரை வெளியே எடுக்க முயற்சித்தனர்..

ஆளாளுக்கு அந்த குக்கரை பிடித்து இழுத்ததில் குழந்தைக்கு தலையில் காயங்கள்தான் ஏற்பட்டது.. வலி தாங்காமல் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டாள்.. கொஞ்ச நேரத்தில் தலையும் வீங்க ஆரம்பித்துவிட்டது.. அதை பார்த்து இன்னும் பயந்துபோன பெற்றோர், உடனடியாக சர் டி ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினர்.

குழந்தைகள் நிபுணராலும் குக்கரை எடுக்க முடியவில்லை.. அதனால் எலும்பு சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டு, அவரும் முயற்சித்தார்.. அப்போதும் குக்கருக்குள் தலை கெட்டியாக மாட்டிக் கொண்டுதான் இருந்தது. கடைசியில் பாத்திரங்கள் ரிப்பேர் செய்பவரை அழைத்து வந்திருக்கிறார்கள்.. அவர்தான் அந்த குக்கரை வெட்டி உள்ளார்.. அதன்பிறகே குழந்தையை காப்பாற்ற முடிந்திருக்கிறது.

மம்மி.. மம்மி.. "உன்னோடது" ஏன் அப்பா கார்ல இருக்க.. மகளின் கேள்வி... ஆடிப்போன அப்பா.. குழம்பிய அம்மா!

குழந்தையின் உயிருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனால் காயங்கள் நிறைய உள்ளன.. இதை பற்றி டாக்டர்கள் சொல்லும்போது, குழந்தை இன்னமும் சிகிச்சையில்தான் இருக்கிறாள்.. அவளது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய், தலை பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கவனித்து கொண்டிருக்கிறோம்.. குழந்தைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெரிந்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைப்போம்" என்றார்.

இதெல்லாம் தேவையா.. எவ்வளவுதான் வேலைகள், பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையின் மீது பெற்றோர் ஒரு கண் வைத்து கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

English summary
baby head gets stuck in the cooker near gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X