For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

26/11க்குப் பின் இந்தியா வந்த சிறுவன் 'மோஷே'.. மும்பையில் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் 'பீனிக்ஸ் பறவை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். இதில் இஸ்ரேல் அதிபருடன் கலந்து கொள்ள 11 வயது சிறுவன் ஒருவனும் வந்து இருக்கிறான்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த இஸ்ரேல் சிறுவன் மும்பை வந்தார்

    மும்பை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். நாளை மும்பையில் நடக்கும் 26/11 நினைவு தின நிகழ்வில் அவர் கலந்து கொள்கிறார்.

    மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாளை அங்கு நினைவு சதுக்கம் திறக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் அதிபருடன் கலந்து கொள்ள 11 வயது சிறுவன் ஒருவனும் வந்து இருக்கிறான்.

    மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் என்ற அந்த சிறுவனின் வருகை இஸ்ரேல் பிரதமரின் வருகையைவிட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்று மக்கள் இப்போதே எதிர்ப்பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

    26/11

    26/11

    கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மிக மோசமான தாக்குதல் இது. இதில் பல இந்திய மக்களும் , வெளிநாட்டு பயணிகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்திய நாட்டிற்கே பெரும் அவமானாக இந்த தாக்குதல் பார்க்கப்பட்டது.

    நினைவஞ்சலி

    நினைவஞ்சலி

    இந்த தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். தற்போது அவர் 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். நாளை காலை மும்பை சென்று அவர் நினைவு சதுக்கத்தை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

    மோஷே

    மோஷே

    இந்த நிகழ்விற்கு இஸ்ரேலில் இருந்து சிறுவன் மோஷே அழைக்கப்பட்டு இருக்கிறான். இவன் 2 வயதாக இருந்த போது மும்பை தாக்குதலில் தன்னுடை தாய் தந்தையை இழந்தான். கோவாவில் வளர்ந்த இவன் அந்த தாக்குதலுக்கு பின் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுவிட்டான். இந்தியாவில் இவனுக்கு உதவியாக இருந்த சான்ட்ரா சாமுவேல் என்பவரின் பராமரிப்பில் தற்போது அங்கு வாழ்ந்து வருகிறான்.

    மீண்டும் மும்பை

    மீண்டும் மும்பை

    தற்போது 10 ஆண்டுகள் கழித்து அந்த சிறுவன் மீண்டும் மும்பைக்கு வந்து இருக்கிறான். நாளை நடக்கும் நிகழ்வில் இஸ்ரேல் பிரதமருடன் அவனும் கலந்து கொள்ள இருக்கிறான். நாளை அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

    வாழ ஆசை

    வாழ ஆசை

    மும்பையை பார்க்க வேண்டும், அங்கு ஒருநாளாவது வாழ வேண்டும் என்று இந்த சிறுவன் பேசி இருக்கிறான். மேலும் இந்திய பிரதமர் மோடியிடமும் அவன் அதே விஷயத்தை கூறியுள்ளான். அதேபோல் அவன் வாழந்த கோவா வீட்டையும் பார்க்க ஆசை தெரிவித்துள்ளான்.

    English summary
    Israel Prime Minister Benjamin Netanyahu will visit to Mumbai tomorrow in order to open memorial for all the people who died in the 26/11 attacks. Baby Moshe back to Mumbai for Benjamin's visit after 26/11 attack. Moshe lost his parents in the 26/11 attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X