For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரம் குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே? ஊடகங்கள் மீது திக்விஜய் சிங் பாய்ச்சல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பலாத்கார சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் சகோதரிகள் பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூங்கில் தொங்கவிடப்பட்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நீதிபதி மீதான பலாத்கார முயற்சி மற்றும் இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்த விவகாரங்களால் ஆளும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வேலையை பாருங்கள் - முலாயம்

வேலையை பாருங்கள் - முலாயம்

இதுகுறித்து ஊடகங்கள் முலாயம்சிங் யாதவிடம் கேள்வி எழுப்பியபோது உங்கள் வேலையை பாருங்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

உங்களுக்கு பாதுகாப்பு இருக்குதானே- அகிலேஷ்

உங்களுக்கு பாதுகாப்பு இருக்குதானே- அகிலேஷ்

அதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷும், ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது நீங்கள் பாதுகாப்பாக தானே உள்ளீர்கள் என்று காட்டமாக பதிலளித்தார்.

முலாயம் கண்டிப்பு

முலாயம் கண்டிப்பு

மேலும் ஊடகங்கள் நாட்டின் மற்ற சம்பவங்களைவிட உத்தரப்பிரதேத்தில் தான், அதிகமான குற்றங்கள் நடப்பதாக பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுகின்றன என்று முலாயம்சிங் கண்டித்தார்.

உமாபாரதி கொந்தளிப்பு

உமாபாரதி கொந்தளிப்பு

இந்நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான உமாபாரதி, பலாத்கார சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றார்.

ஜனாதிபதி ஆட்சி

ஜனாதிபதி ஆட்சி

மேலும் உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக உமாபாரதி தெரிவித்தார்.

திக்விஜய்சிங் கேள்வி

திக்விஜய்சிங் கேள்வி

தற்போது உ.பி.யில் நடந்த பலாத்கார சம்வங்கள் குறித்து நாட்டின பிரதமர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் காட்டம்

ட்விட்டரில் காட்டம்

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள திக்விஜய்சிங், பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது பாலியல் பலத்கார விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்தின. ஆனால் படான் பாலியல் பலாத்கார விவகாரத்தில் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதில் மீடியாக்களும் அமைதியாக உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Congress general secretary Digvijay Singh on Thursday hit out at the media for not questioning Prime Minister Narendra Modi on the horrific Badaun gang-rape case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X