For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பினால் நம்புங்கள்... பால்கோட் பகுதியில் 170 தீவிரவாதிகள் சாவு.. இத்தாலி பத்திரிகையாளர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்கியது உண்மையா?.. பொய்யா?- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், பாகிஸ்தான் அரசு எந்த சம்பவமும் நடக்கவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இருப்பினும், இந்திய விமானப்படை தாக்குதலில் 250 - 300 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்களை காட்டும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

    முஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்முஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    நடந்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் புல்வாமா தாக்குதல் விவகாரம் எதிரொலித்தன. காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருப்பதாக கூறப்பட்டது. மேலும், நரேந்திர மோடி விளம்பரத்திற்காக ராணுவ தாக்குதலை பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

    செயற்கை கோள் புகைப்படம்

    செயற்கை கோள் புகைப்படம்

    எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து, செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பிட்டு சொல்லப்படும் இடத்தில் எந்த தாக்குதலும் நடைபெற்றது போன்ற அறிகுறி இல்லை என பிரபல செய்திநிறுவனம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சந்தேகம் வலுத்தது.

    இத்தாலி பத்திரிகையாளர்

    இத்தாலி பத்திரிகையாளர்

    இந்தநிலையில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரான பிரான்செஸ்கா மரினோ, கடந்த பிப்ரவரி 26 ம் தேதியன்று இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 130 - 170 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்கு உள்ளான சுமார் 45 பேர் வரை ஷின்கியாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    நம்பகமான தகவல்

    நம்பகமான தகவல்

    தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து நம்பகமான ஆதாரங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாத பயிற்சியாளர்களும் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, முகாம் இருந்த இடம் சீலிடப்பட்டு இப்போது வரைக்கும் யாருக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை. மாறாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட பகுதி உள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கான சில புகைப்படங்களையும் பிரான்செஸ்கா மரினோ வெளியிட்டார்.

    English summary
    Italian journalist Francesca Marino reports That 170 terrorists were killed In Balakot attack
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X