For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நினைவிருக்கட்டும்.. இது வங்கம்.. மோடிக்கும், ஷாவிற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்.. மமதா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mamata slams modi: மோடி, அமீத்ஷா மீது மமதா பாய்ச்சல்- வீடியோ

    கொல்கத்தா: பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கும் மேற்கு வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

    நேற்று திடீர் திருப்பமாக மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தேர்தல் பிரச்சார தடை இன்றோடு அமலுக்கு வருகிறது.

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இன்று இரவு 10 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் தடைக்கு வருகிறது.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி, தன்னுடைய பொதுக்கூட்டம் மூலம் அமித் ஷாதான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டது. அவர் எங்கள் தலைவர் வித்யாசாகரின் சிலையை அடித்து உடைத்தார். ஆனால் மோடி அதற்கு இன்னும் மன்னிப்பு கூட கேட்கவில்லை. நாங்கள் அவர்களை மன்னிப்போம் என்று நினைக்கிறார்களா?

    எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #bengal burning எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #bengal burning

    தேர்தல் ஆணையம் இல்லை

    தேர்தல் ஆணையம் இல்லை

    வங்கத்து மக்கள் இதை மிக தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். அமித் ஷா மீது இதற்காக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித் ஷா நேற்று கலவரத்திற்கு பின் பேட்டி அளித்தார். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று கூறி அவர் தேர்தல் ஆணையத்தை மிரட்டினார்.

    நாங்கள் வங்காளிகள்

    நாங்கள் வங்காளிகள்

    இதனால்தான் தற்போது வங்கத்தில் பிரச்சாரத்தை தடை செய்து இருக்கிறார்கள் போல. தேர்தல் ஆணையம் பயப்படலாம். நினைவிருக்கட்டும். நாங்கள் வங்காளிகள். நாங்கள் பயப்பட மாட்டோம். அமித் ஷாவிற்கும் மோடிக்கும் வங்கம் பயப்படாது.

    பிரதமர் மோடி எப்படி

    பிரதமர் மோடி எப்படி

    பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசுவதால் மேற்கு வங்கத்தை பாஜக குறிவைத்துள்ளது. இங்கு பெரிய கலவரம் எல்லாம் நடக்கவில்லை. தேர்தல் ஆணையம் தேவையில்லை இந்து பிரச்சாரம் செய்ய தடை விதித்து இருக்கிறது. தேர்தலுக்கு பின் எல்லாம் மாற போகிறது, என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Ban on Campaign in West Bengal: We are Bengalis, We don't afraid of Modi and Shah says Mamata.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X