For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரின் குறிப்பிட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நாட்களுக்கு ரத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: நாளை முதல் ஐந்து நாட்களுக்கு பெங்களூரின் பீன்யா மார்க்க மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

பெங்களூரில் எம்ஜிரோடு முதல் பையப்பனஹள்ளி வரையிலும், மெஜஸ்டிக் அடுத்த சம்பிகே ரோடு முதல் பீன்யா வரையிலும் இரு மார்க்கங்களில் ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Bangalore metro service will get affected

இந்நிலையில் பீன்யா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் மற்றும் ஜாலஹள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார இணைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 25ம் தேதி வரை யஷ்வந்த்பூர் மற்றும் பீன்யா ஆகிய இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ சேவை நிறுத்தப்படுகிறது.

இதனால் பயணிகள் நகர பஸ்களில் பயணித்துக்கொள்ளுமாறு மெட்ரோ கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரம், சம்பிகே ரோடு முதல் யஷ்வந்த்பூர் வரை ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்.

English summary
The Bangalore metro train service between Peenya to Yaswanthpur will be suspend up to 25 September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X