For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவப்பு சாம்பாரும்… சிலபல ஐடி எஞ்சினியர்களும் – இது பெங்களூர் ஸ்பெஷல்ங்கோவ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு சிட்டி குளிருக்கு மட்டும் பேர் போனதல்ல... சிவப்பு கலர் ஆரத்தி ஸாரி... ஸாரி சாம்பாருக்கும், அதில் ரெண்டு கல்லுக்கணக்கா கிடக்கற இட்லிக்கும், இன்னும் பிற விஷயங்களுக்கும் கூட ரொம்பப் பிரபலமான ஊர்.

அதில் சில சாம்பிள்கள்தான் இங்க உங்களுக்காக... ஏற்கனவே பெங்களூரு போயிருக்கற மக்களுக்கும், இனி போகப் போற மக்காசுக்கும் இது உபயோகமா இருக்கும்...!

இது முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க மட்டும்தான்.. மற்றபடி மனதை சொரண்டி வேதனைப்படுத்த அல்ல... பெங்களூரு வாலாக்கள் மன்னிச்சூ...!

கல்லைக் கையில் எடுத்தா யாரு கிடைப்பா?:

கல்லைக் கையில் எடுத்தா யாரு கிடைப்பா?:

பெங்களூருவில் நீங்க ரோட்டில் ஒரு கல்லை குத்துமதிப்பா விட்டு எறிஞ்சீங்கனா ஒன்னு அது ஒரு நாயை அடிக்கும், இல்லைன்னா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் மண்டையை உடைக்கும். ஏன்னா, அந்தளவுக்கு ரெண்டு பேருமே அங்க ஜாஸ்தி.

மிஞ்சி இருக்கறதில்தான் பயணம்:

மிஞ்சி இருக்கறதில்தான் பயணம்:

இந்தியாவில் லெப்ட் சைட்ல மட்டும்தான் டிரைவ் பண்ணனும் அப்படிங்கறது விதி. ஆனா, பெங்களூரில் நீங்க லெப்ட் ஆப் தி ரோட்டில் மட்டும்தான் டிரைவ் பண்ண முடியும்.

பாலோ தி ரூல்ஸ் பார் ஜெயில்:

பாலோ தி ரூல்ஸ் பார் ஜெயில்:

பெங்களூருவில் ஒரு ஆக்சிடெண்டை ஏற்படுத்தனும்னா டிராபிக் ரூல்ஸை மட்டும் பாலோ பண்ணினா போதும்.

ஹையயோ ஆன்ட்டி அது பஸ் கம்பெனி இல்ல:

ஹையயோ ஆன்ட்டி அது பஸ் கம்பெனி இல்ல:

பெங்களூருவில் வீடு பார்க்கப் போன ஒரு பையன் தான் 'இன்போசிஸ்'ல வேலை பார்க்கறேனு சொல்லியும் அவனுக்கு வீடு கிடைக்கலை. ஏன்னா,வீட்டுக்காரங்க அது ஒரு பஸ் கம்பெனினு நினைச்சுட்டாங்க. பெங்களூரில் இன்போசிஸ் பஸ்தான் கவர்மெண்ட் பஸ்ஸைவிட அதிகம். அதான், அவங்களே கன்ப்யூஸ் ஆய்ட்டாங்க பாவம்.

என்ன கொடும சார் இது:

என்ன கொடும சார் இது:

பெங்களூருவில் முதல் பிசினஸே பேயிங் கெஸ்டிங் என்னும் ஹாஸ்டல்கள்தான். ஐடி கூட ரெண்டாவது இடத்தில்தான் இருக்கு.

கரெக்டா கேட்டுக்கோங்க ஆமா:

கரெக்டா கேட்டுக்கோங்க ஆமா:

பெங்களூரில் யாராவது மழை பெய்யுதுனு சொன்னாங்கனா எந்த ஏரியால, எந்த குறுக்குச் சந்தில், எந்த ரோட்டில் பெய்யுதுனு கேட்க மறக்காதீங்க. அந்த அளவுக்கு ஆங்காங்கே.. அப்பப்ப. அளவளவா பெய்யுது பாஸ்.

நிறுத்து… நிறுத்துப்பா:

நிறுத்து… நிறுத்துப்பா:

ஒரு பெங்களூரு வாசி டிராபிக் லைட்டை பார்த்து வண்டியை நிறுத்தினா மத்தவங்களும் அதுக்கு பின்னாடியே, நிறுத்திடுவாங்க. ஏன்னா, அவர் போலீஸ்காரர்கிட்ட மாட்டிகிட்டார், நாம மாட்டக் கூடாதுனு நினைச்சுதான். டிராபிக் சிக்னலில் நின்றால் கூட போலீஸ் புடிக்கிறாங்கப்பா..

அவ்ளோ டிராபிக்பா:

அவ்ளோ டிராபிக்பா:

பெங்களூருவில் மட்டும்தான் தூரத்தினை அந்தந்த நேரத்தினைப் பொறுத்து கணக்கில் எடுத்துக்கறாங்க. காலை 7 மணிக்கா அப்ப 10 கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் கடக்கலாம்.. அதுவே ராத்திரி 7 மணியா.. ஒரு - 2 மணி நேரமாகும் பாஸ்!

நிஜமாவே 1 லட்சம்தான:

நிஜமாவே 1 லட்சம்தான:

ரிக்‌ஷா டிரைவர்ல இருந்து, சாதாரண பொட்டிக் கடைக்காரர் வரை உங்களுக்கு 1 லட்சம் சம்பளம்னு நினைப்பாங்க நீங்க ஐ.டில வேலை பார்க்கறேனு சொன்னீங்கனா.

இது இல்லைனா அது:

இது இல்லைனா அது:

பெங்களூருவில் இருக்கும் 100 க்கு 90 எஞ்சினியர்கள் ஒன்னு கடும் மன உளைச்சலில் இருப்பாங்க இல்லை பாய் ப்ரெண்ட், கேர்ள் ப்ரெண்ட் கூட இருப்பாங்க (கழுதை, ரெண்டும் ஒன்னுதான்னு பலருக்கும் புரிவதில்லை).

பாங் பாங்!

பாங் பாங்!

பிரேக்கினை விட பெங்களூரில் ஹார்ன் யூஸ் பண்ற பஸ் டிரைவர்கள்தான் அதிகம்.

பெங்களூர் தத்துவம்:

பெங்களூர் தத்துவம்:

கன்னட மொழியினை விட "சி" மொழி தெரிந்தவர்களை அதிகம் கொண்ட நகரம். பெங்களூரின் யுனிவெர்சல் பதில் எப்பவுமே, "கொஞ்சம் அட்ஜஸ்ட் மாடி"...

சிரிக்க மட்டுமே கேரண்டி:

சிரிக்க மட்டுமே கேரண்டி:

இதையெல்லம் படிச்சு நீங்க வயிறு வலிக்க சிரிச்சா அந்த பெங்களூரு வாசிகளில் நீங்களும் ஒருத்தர்... இல்லை அடிக்க என்னை தேடிக்கிட்டு இருந்தா உங்களுக்கு ஸ்டிரெஸ் அதிகமாய்டுச்சுனு அர்த்தம்... நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா.. கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கீங்களா.. இல்லை இந்தப் பக்கம் இருக்கீங்களான்னு..!

English summary
If you throw a stone randomly in Bangalore, chances are, it will hit a dog or asoftware engineer. While the dog may or may not have a strap around his neck, the software engineerwill definitely have one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X