For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி புகார்.. லதா ரஜினிகாந்த் மீது எப்ஐஆர்... பெங்களூர் போலீஸ் பதிவு செய்தது!

By Shankar
Google Oneindia Tamil News

பெங்களூர்: மோசடி, பொய்யான ஆவணங்களைத் தந்தது போன்ற பிரிவுகளில் ரஜினிகாந்த் மனைவி லதா மீது எப்ஐஆர் எனப்படும் முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளது பெங்களூர் போலீஸ்.

அட் பீரோ என்ற நிதி நிறுவனத்துடனான பிரச்சினை தொடர்பாக லதா ரஜினிகாந்த் பற்றி செய்தி வெளியிட 76 பத்திரிகைகள் மற்றும் செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மீது தடை பெங்களூர் நீதிமன்றத்தில் தடை பெற்றிருந்தார் லதா ரஜினி.

Bangaloru police filed FIR against Latha Rajini

ரஜினியை வைத்து மோஷன் கேப்சரிங் முறையில் சவுந்தர்யா ரஜினி உருவாக்கிய கோச்சடையான் படத்துக்கு பைனான்ஸ் செய்த விவகாரத்தில், இந்த ஆட் பீரோ நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை லதா மீது சுமத்தியது.

தன்மீதான புகார்களை மறுத்து ஆட் பீரோ நிறுவனத்தின் அபிர்சந்த் நஹாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் உரிமையை இரண்டு முறை வேறு வேறு நபர்களுக்கு தங்கள் கவனத்துக்கு கொண்டுவராமல் விற்று மோசடி செய்தார் என லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் அபிர்சந்த் நஹார்.

இந்த வழக்கில் மோசடி மற்றும் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்தது போன்ற பிரிவுகளில் லதா ரஜினிகாந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு பெங்களூரு மெட்ரோபாலிடன் நீதிபதி கடந்த ஜூன் 9 -ம் தேதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து லதா ரஜினி மீது எப்ஐர் பதிவு செய்துள்ளனர் பெங்களூரு போலீசார். வழக்கு விசாரணைக்காக பெங்களூரு போலீஸ் சென்னைக்கு வருவார்கள் என்று தெரிகிறது.

English summary
A Bangalore City court has ordered a case to be filed against her on the basis of a private complaint filed against Latha Rajnikanth and 3 others in relation to the financial deal of ‘Kochadaiyaan'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X