For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு நகரின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெயர் பெற்றழரான பாரதி வீரத் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் பாரதி. 10 வருடத்திற்கு முன்பு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார். நாகஷெட்டி ஹள்ளி பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். 2 வருடத்திற்கு முன்பு இவர் உபேர் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக சேர்ந்தார். அதன் மூலம் பெங்களூரு நகரின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும் இவர் பிரபலமானார்.

Bangaluru's first woman cab driver dies

39 வயதான பாரதி தனியாக வசித்து வந்தார். அவரா் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாரா். அவர் தற்கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக் கடிதம் எதையும் அவர் எழுதி வைத்திருக்கவில்லை.

அவரது போர்ட் பியஸ்டா கார் அவரது வீட்டுக்கு அருகே தனியாக நின்றிருந்தது. இதுகுறித்து உபேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் பாரதி. எங்களது பெண் டிரைவர்களிலேயே அவர் மட்டுமே துணிச்சலானவரும் கூட. மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

பாரதி, ஆந்திராவுக்கே திரும்பிப்போகும் திட்டத்தில் இருந்தாராம். இதுகுறித்து தனது வீட்டு உரிமையாளரிடமும் கூறி வைத்திருந்தாராம். இந்த நிலையில்தான் அவர் மரணத்தைச் சந்தித்துள்ளார்.

English summary
Bangaluru's first woman cab driver Bhaathi Veerath has found dead in her house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X