For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிணாமூல் காங்.கிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. வங்கதேச நடிகர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக புகழ்பெற்ற வங்கதேச நடிகர் பெர்தோஸ் அகமது பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக, இந்தியா - வங்கதேச எல்லை பகுதியில் உள்ள ஹெம்தாபாத், காரான்திகாய் பகுதிகளில் வங்கதேச நடிகர் பெர்தோஸ் அகமது பிரசாரம் மேற்கொண்டாதாக கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் பெர்தோஸ் அகமது விசா நடைமுறைகளை மீறினாரா என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க, கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலர் அறிக்கை அளிக்க மத்திய உள்துறை அமைச்கம் உத்தரவிட்டிருந்தது.

Bangladeshi actor inclusion in the black list who campaigned and support for the mamtha party

இந்நிலையில் வங்கதேச நடிகர் பெர்தோஸ் அகமது விசா நடைமுறைகளை மீறியுள்ளதாக விரிவான அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் பெர்தோஸ் அகமது உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம் வெளிநாட்டவருக்கு விசா வழங்குவது இந்திய அரசின் செயல்பாடாகும். இதில் எந்தவொரு மாநில அரசுக்கும் பொறுப்போ பங்கோ இல்லை

விதிகளின்படி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர் எவரும் எந்த ஒரு கட்சிக்கும் வாக்கு கேட்டு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுட முடியாது. ஆனால் வங்கதேச நடிகர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்! முதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்!

எனவே அவர் உடனடியாக தனது தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும். மேலும் விசா நடைமுறைகளை மீறியதற்காக கருப்பு பட்டியலிலும் பெர்தோஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. நடிகர் பெர்தோஸ் அகமது கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Bangladeshi actor ferdous Ahmad propagated in support of the Trinamool Congress in the Lok Sabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X