For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.2654 கோடி கடன் மோசடி விவகாரம்.. குஜராத்தை சேர்ந்த மூன்று தொழிலதிபர்கள் கைது!

ஆந்திர வங்கியில் ரூ.2654 கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாத முறைகேடு வழக்கில் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்ய

By Shyamsundar
Google Oneindia Tamil News

காந்திநகர்: ஆந்திர வங்கியில் 2654 கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாத முறைகேடு வழக்கில் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குஜராத்தை சேர்ந்த டையமண்ட் பவர் இன்ஃபிராஸ்டிரெக்ஸர் என்ற நிறுவனம் ஆந்திரா வங்கியில் 2654 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை மற்றும் வட்டியை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை.

Bank fraud: 3 Diamond Power company promoters arrested in Gujarat

இதையடுத்து 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் நிறைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த மோசடியில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இவர்கள் வாங்கிய கடனில் இதுவரை ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகளை அமலாக்கத்துறை போலீஸ் தேடி வந்தது. ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் இவ்வளவு மாதங்களாக திணறி வந்தது.

இந்த நிலையில் தற்போது வதோதராவை சேர்ந்த சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இவர்கள்தான் அந்த நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Rs. 2654 crore Andhra Bank fraud case, 3 Diamond Power company promoters arrested in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X