For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேதர்நாத்தில் இடிபாடுகளுக்கு இடையே கிடந்த வங்கி லாக்கரில் ரூ.1.90 கோடி பணம்!

By Siva
Google Oneindia Tamil News

Bank locker found at Kedarnath, Rs 1.90 crore recovered
டேராடூன்: கேதர்நாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புறவு செய்யும்போது ரூ.1.90 கோடி ரொக்கம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் இடிபாடுகளுக்கு இடையே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதர்நாத்தில் உள்ள பிரபல சிவன் கோவிலில் 86 நாட்கள் கழித்து
கடந்த புதன்கிழமை தான் பூஜைகள் மீண்டும் நடக்கத் துவங்கின.

பூஜைகளை துவங்கும் முன்பு கேதர்நாத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது கடந்த 8ம் தேதி அன்று இடிபாடுகளுக்கு இடையே பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இது குறித்து டேராடூனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை அந்த லாக்கர் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த ரூ.1.90 கோடி ரொக்கம் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக சமோலி மாவட்டத்தில் இடிபாடுகளை அகற்றியபோது பாரத ஸ்டேட் வங்கிக் கிளை செயல்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளிக்கிடையே கிடந்த லாக்கரில் ரூ.33 லட்சம் ரொக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rs 1.90 crore in cash were recovered from a bank locker pulled out of the debris at Kedarnath during cleaning operations prior to resumption of prayers at the Himalayan shrine on September 11, a senior police official said on Sunday. The locker of State Bank of India was pulled out of the debris during cleaning operations on September 8, prior to resumption of prayer at the famous shrine, Rudraprayag SP Varinder Jeet Singh said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X