For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவலைப்படாம போங்க.. உறுதியளித்த ராஜீவ் குமார்.. வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Bank strike withdrawn | ராஜீவ் குமார் கொடுத்த உறுதி! வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்- வீடியோ

    டெல்லி: அரசின், வங்கி இணைப்பு அறிவிப்பு தொடர்பான வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளை சரி செய்ய நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள், வங்கிகளின், இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த அழைப்பை ஒத்திவைத்துள்ளன.

    மத்திய அரசு அறிவித்த வங்கி இணைப்பு திட்டத்திற்கு வங்கி அலுவலர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    Bank strike withdrawn by unions

    அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA), இந்திய தேசிய வங்கி அலுவலர்கள் காங்கிரஸ் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (நோபோ) வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்து 2 நாள்தான் ஆகிறது.. இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே!'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்து 2 நாள்தான் ஆகிறது.. இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே!

    இந்த நிலையில், டெல்லியில் நேற்று நிதித்துறை செயலர் ராஜீவ் குமாரை சந்தித்த பிறகு, 4 வங்கி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

    அதில், "அனைத்து வங்கிகளின் அடையாளத்தையும் பாதுகாப்பது உட்பட 10 வங்கிகளின் முன்மொழியப்பட்ட இணைப்பால் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பதாக நிதி செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். எனவே வேலைநிறுத்த அழைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனவே 48 மணிநேர வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்பதால் பொதுமக்கள் இப்போது பெருமூச்சு விடலாம்.

    English summary
    The Officers' unions of public sector banks have deferred the September 26-27 two-day all-India strike call for banks following an assurance from Finance Secretary Rajiv Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X