For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுமக்களின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகள் இன்று இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும் என்று ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : வருமானவரி தாக்கல் செய்வோரின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Banks are open till 8PM today

மேலும், மின்னணுப் பணப்பரிமாற்றங்கள் நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் சிரமம் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ம் தேதி வங்கிகள் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கிப் பரிமாற்றங்கள் செய்து கொள்ள இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏப்ரல் 2ம் தேதி ஆண்டு முடிவு தினத்தன்று வங்கிகள் திறந்திருந்தாலும், வங்கிப் பரிமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்றும், மிண்ணனுப் பணப்பரிமாற்றங்களும் அந்த தினத்தில் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

English summary
Banks are open till 8PM today. Banks open up to 8.00 PM today for greater convenience to tax payers. Electronic transactions can also be done till midnight today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X