For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாச வெப்சைட்டுகளுக்கு தடை.. தாலிபான் நடவடிக்கைக்கு இணையானது: ராம்கோபால் வர்மா சாடல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கும், தாலிபான்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச வெப்சைட்டுகள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இணைய சேவை

இணைய சேவை

தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857 ஆபாச வெப்சைட்டுகளையும் தடை செய்துவிட்டன.

இதுகுறித்து தொடர்ச்சியான சில டிவிட்டுகள் மூலம், காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவர் கூறியதன் தொகுப்பு இதோ:

அரசுக்கே ஆபத்து

ஆபாச இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த அரசாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் காணாமல்போவது உறுதி.

இப்படி டிரை பண்ணலாமே

ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவதைவிட, அதிலுள்ள அம்சங்களை முறைப்படுத்துவதற்கு (சிறுமிகளின் படங்களை நீக்குவது உள்ளிட்ட) மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாலிபான், ஐஎஸ்ஐஎஸ்

வயது முதிர்ச்சியுடையோர், பிறருக்கு தீங்குதராமல், ஆபாச வெப்சைட்டுகளை பார்த்து, இன்பம் காண்கின்றனர். இதுபோன்ற ஒரு செயலை தடுப்பது என்பது, தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், மக்களின் சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈடானது.

ரோடுன்னா விபத்து நடக்கும்

விபத்து நடைபெறுகிறது என்பதற்காக, சாலையில் போக்குவரத்தை நிறுத்திவிடுவதற்கு சமமானது, ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்வது என்பது.

தானாகவே விளைந்துவிடும்

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதையடைந்ததும், செக்ஸ் குறித்த செயல்பாடுகள் இயல்பாக அவர்களுக்கு வந்துவிடும். இதற்கு ஆபாச வெப்சைட் பார்க்க தேவையில்லை.

தடை செய்தால் ஆதரவு

எந்த ஒரு விஷயத்தை தடை செய்கிறோமோ அந்த விஷயத்துக்கு பலம் கூடிவிடும் என்பதை, வரலாறு பலமுறை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.

ஒருவகையில நல்லது

பாலியல் குற்றங்களை ஆபாச வெப்சைட்டுகள் தூண்டாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பாலியல் தேவைகளை தணித்துக்கொண்டு, அந்த வேட்கை பிற பெண்கள் மீது திரும்பாமல் தடுக்க ஆபாச வெப்சைட்டுகள் உதவுகின்றன என்று பல்வேறு சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ராம் கோபால் வர்மா தனது டிவிட்டுகளில் டியுள்ளார்.

English summary
"To deprive consenting adults of the harmless fun they ar having of watching porn is equivalent of what Taliban nd Isis is doing to freedom" tweeted by Ram Gopal Varma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X