For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- பகீர் கிளப்பும் ஆளுநர் பன்வாரிலால்

Google Oneindia Tamil News

Recommended Video

    துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- ஆளுநர் பன்வாரிலால்- வீடியோ

    சென்னை: துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேதனை தெரிவித்துள்ளார்.

    சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பன்வாரிலால் புரோஹித் கூறுகையில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டுள்ளது.

    Banwarilal Purohit says that there were lot of corruption in appointing VC

    இதை கண்டு வேதனை அடைந்தேன். மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில்தான் நியமித்துள்ளேன்.

    பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. பல கோடி பணப்பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதை நான் நம்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முன் அண்ணா பல்கலையில் நடந்த விழாவில் பேசுகையில் இதே குற்றச்சாட்டை ஆளுநர் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    [ ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. தெலுங்கானாவிற்கும் சான்ஸ்? ]

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் மோசடி நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது நினைவுக்கூரத்தக்கது.

    English summary
    Governor Banwarilal Purohit says that there weer lot of corruption in appointing Vice Chancellors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X