For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு

டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு ஒபாமா மோடியுடன் உரையாற்றினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது டெல்லி வந்து இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமான ஒபாமா பாவுண்டேஷன் அமைப்பின் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் வந்து உள்ளார்.

Barack Obama meets PM Modi

இந்த விழா முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி நடத்தப்படும் விழா ஆகும். இந்திய இளைஞர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக கடந்த 10 நாட்களாக பேஸ்புக்கில் இது குறித்து நிறைய விளம்பரங்களும், வீடியோக்களும் வந்து கொண்டிருந்தது.

இந்த விழாவை முடித்துவிட்டு ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் இதற்கு மூன்று 8 முறைக்கும் அதிகமாக சந்தித்து உள்ளனர். கடைசியாக 2015ல் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஒபாமா இந்தியா வந்திருந்தார்.

ஒபாமா மோடியிடம் தன்னுடைய ஒபாமா பவுண்டேஷன் குறித்து பேசியிருக்கிறார். மேலும் தன்னுடைய நிறுவனத்தின் குறிக்கோள் குறித்தும், இந்திய இளைஞர்களின் தேவை குறித்தும் இருவரும் கலந்துரையாடினார்கள்.

English summary
Former US president Barack Obama visits India in order join a town hall event of his company Obama Foundation. He meets PM Modi in order to talk about his organisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X