For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெகன் சொத்து குவிப்பு வழக்கில் கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

By Mathi
Google Oneindia Tamil News

BCCI chief Srinivasan, Jagan Reddy appear before court in DA case
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்.சீனிவாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தமது தந்தையும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயரை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமென்ட் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் இன்று ஹைதராபாத்தில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

English summary
Board of Control for Cricket in India (BCCI) President N Srinivasan appeared before a CBI special court in Hyderabad on Friday. He was summoned in connection with the disproportionate assets case of the YSR Congress Party chief YS Jagan Mohan Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X