For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்க்கண்ட் தேர்தலும்.. ஒப்பந்த நீக்கமும்.. அரசியல் ரீதியாக பழி வாங்கப்படுகிறாரா தோனி?.. பின்னணி

தோனியின் பெயர் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Dhoni removed | அரசியல் ரீதியாக பழி வாங்கப்படுகிறாரா தோனி? பின்னணி என்ன?

    டெல்லி: கிரிக்கெட் தோனியின் பெயர் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

    கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை 5 கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. பாஜகவிற்கு இந்த தேர்தல் தோல்வி பெரிய அதிர்ச்சி அளித்தது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை வரிசையாக குறைந்து வருகிறது.

    முன்னதாக ஜார்க்கண்ட் தேர்தலில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனியை களமிறக்க பாஜக நினைத்தது. எப்படி டெல்லி லோக்சபா தேர்தலில் கம்பீர் களமிறங்கினாரோ அதேபோல் தோனியை களமிறக்க பாஜக நினைத்தது. ஜார்க்கண்ட் தோனியின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது! மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் பாஜகவில் இணைவது குறித்து தோனி பெரிதாக ஆர்வம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் தோனியை தேர்தல் பிரச்சாரம் செய்ய பாஜக அழைத்தும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தோனி இதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.

    தோனி நிலை

    தோனி நிலை

    இதனால் தற்போது மத்திய அரசால் தோனி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். பிசிசிஐ அமைப்பின் செயலாளராக தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெ ஷாதான் இருக்கிறார். இவரின் அழுத்தம் காரணமாக தோனி பழி வாங்கப்படுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.தோனிக்கு முறையாக ஓய்வு மரியாதையை அளிக்க கூடாது என்று இப்படி செய்கிறார்கள் என்கிறார்கள்.

    பிசிசிஐ எப்படி

    பிசிசிஐ எப்படி

    தோனியின் பெயர் பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் வீரர்கள் 2020 ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஏ+. ஏ, பி, சி என்று எந்த வீரர்களின் பட்டியலிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை. இதற்கு காரணம் அரசியல்தான் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் தேர்தலை மனதில் வைத்து பாஜக இப்படி செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இது தொடர்பாக பிசிசிஐ அளித்துள்ள விளக்கத்தில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெற ஒரு வீரர் குறிப்பிட காலத்திற்குள் குறிப்பிட்ட அளவு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அக்டோபர் 2019 முதல் தற்போது வரை மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒருநாள் போட்டிகள் அல்லது மூன்று டி20 போட்டிகளில் அவர் ஆடியிருக்க வேண்டும். ஆனால் தோனி ஓய்வில் இருந்ததால் கிரிக்கெட் போட்டியில் ஆடவில்லை. இதனால் அவர் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்ப்டுகிறது .

    English summary
    BCCI's removing name of farmer captain Dhoni from Contract players raises few political questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X