For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் அணியுடன் ஆட மறுத்த இந்திய பெண்கள் அணி- ஐசிசி நடவடிக்கையால் பிசிசிஐ கொந்தளிப்பு

பாகிஸ்தானுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாட மறுத்ததற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : இந்திய பெண்கள் கிரிட்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை ஐசிசி குறைத்ததற்கு இந்தியா கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்பந்தப்படி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எல்லைப் பிரச்சனை, இந்திய வீரர்கள் படுகொலை, பாகிஸ்தான் படை அத்துமீறள் ஆகிய காரணங்களால் இந்திய பெண்கள் அணி விளையாட மறுத்தது.

BCCI warns ICC for cutting Indian women's team points!

இதனால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை சர்வதசே கிரிக்கெட் கவுன்சில் குறைத்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு தெரிந்துள்ள நிலையில் இந்திய பெண்கள் அணியின் மீதான நடவடிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ஐசிசி தனது நடவடிக்கையில் இருந்து பின் வாங்காவிட்டால் பெண்கள் அணிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியும் சாம்பியன் கோப்பை போட்டியில் விளையாடாது என எச்சரித்துள்ளது.

English summary
BCCI warns ICC for cutting womens team points for not playing with pakistan on Auguest 1st to October 31 as per agreement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X