For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பியாஸ் வெள்ள விபத்து - மேலும் 3 பேர் உடல் மீட்பு: 9 பேரை இன்னும் காணவில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மணாலி: இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி வெள்ள விபத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 3 பொறியியல் மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற ஹைதராபாத் மாணவர்கள் அங்குள்ள பியாஸ் ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்த போது திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் 24 மாணவ - மாணவிகள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.

தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இவர்களை தேடும் பணியில் , மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் மேலும் ஆள் இல்லாத விமானம் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தண்ணீருக்குள் நவீன கேமிராவை பொருத்தியும் தேடப்பட்டது. ஒவ்வொரு உடலாக மீட்கப்பட்டு வருகின்றன.

15 நாட்களுக்குப் பின்

15 நாட்களுக்குப் பின்

விபத்து நடைபெற்று 15 நாட்கள் ஆன நிலையில், பைரிநேனி ரித்திக், பரமேஷ்வர், முப்பிடி கிரண்குமார் ஆகிய மூன்று மாணவர்களின் உடல்கள் பண்டோ அணைப் பகுதியில் மீட்கப்பட்டன.

16 பேர் உடல்கள் மீட்பு

16 பேர் உடல்கள் மீட்பு

இதுவரை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

9 பேரின் உடல்கள் எங்கே

9 பேரின் உடல்கள் எங்கே

சுற்றுலா ஏற்பாட்டாளர், மூன்று மாணவிகள் உள்பட 9 பேரின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. இவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், போலீசார் உட்பட 600 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Three bodies of students was found on sunday, 15 days after 25 persons, including 24 students from a Hyderabad engineering college, were swept away in the river. The deceased has been identified as Sairaj of AS Rao Nagar in Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X