For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம்

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: பல்லாயிரம் மக்களின் தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்திய பாக் எல்லைப்பகுதியான அட்டாரி எல்லைப்பகுதியில் 360 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அதிக உயரம் கொண்ட கொடி கம்பம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

Beating The Retreat ceremony underway at Attari-Wagah border

இங்கு ஒவ்வொரு நாளும் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பை காணவும் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள்.

இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஏற்றப்பட்ட கொடியினை மாலையில் இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவிப்பை கண்டு உற்சாக குரல் எழுப்பிய பொதுமக்கள் தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர்.

அடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம் அடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்

இந்த முழக்கங்களுககு இடையே கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வை காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். மக்களின் உணர்ச்சி பூர்வ சேதபக்தி முழக்கங்களும் கொடியிறக்கும் வைபமும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

English summary
'Beating The Retreat' ceremony underway at Attari-Wagah border on 73rd Independence Day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X