For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் பிச்சை எடுத்தால் சிறை.. போலீஸ் கமிஷனர் உத்தரவு!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்றில் இருந்து பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் இன்றில் இருந்து பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். சரியாக இன்று மாலை ஆறுமணியில் இருந்து இந்த தடை சட்டம் ஆரம்பிக்கும்.

ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக பிச்சைக்காரர்கள் காரணமாக நிறைய பிரச்சனைகள் நடந்து வருகிறது. பல இடங்களில் இதன் காரணமாக தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுத்தமான இடங்கள் பிச்சைக்காரர்களால் அசுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Begging has banned in Hyderabad by city police

இதையடுத்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஹைதராபாத் காவல்துறை முடிவு எடுத்துள்ளது. அதன்படி இனி ஹைதபாரத்தின் எந்தப் பகுதியிலும் பிச்சை எடுக்க கூடாது என போலீஸ் அறிவித்தது. இதுகுறித்த தகவலை ஹைதரபாத் காவல் துறை கமிஷனர் எம்.மஹேந்திர ரெட்டி வெளியிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹைதராபாத் பகுதியில் பிச்சை எடுப்பவர்களால் பொது மக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படுகிறது. பிச்சை தொழிலில் நிறைய குழந்தைகளும், பெண்களும் ஈடுபடுகிறார்கள். அதேபோல் இவர்களால் பல சமயங்களில் சாலை விபத்தும் ஏற்படுகிறது. ஆகவே ஹைதரபாத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்படுகிறது'' என்று கூறினார்.

இந்த தடை 2018 ஜனவரி 1ம் தேதி வரை மட்டுமே இருக்கும். தடையை மீறி பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கபப்டும். இதன் விளைவுகளை பார்த்துக் கொண்டு தடையை நீட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அறிவித்து உள்ளார்.

English summary
Begging has banned in Hyderabad by city police. They took this decision inorder to over come alleged public nuisance. This ban will be in active till January 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X