For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #BengalBurning

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019 | மே.வங்கம்: முஸ்லீம் வாக்கு யாருக்கு?.. பாஜகவின் வளர்ச்சி எப்படி?- வீடியோ

    கொல்கத்தா: மேற்குவங்கத்தில் தொடரும் வன்முறை டிவிட்டரில் எரியுது வங்கம் என வைரலாகி வருகிறது.

    வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் ஒருநாள் முன்னதாக, இன்று தேர்தல் பிரசாரம் ஓய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    லோக்சபா தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு மே 19 ஆம் தேதி நடக்க உள்ளது. கொல்கத்தாவில் டம் டம், பாரசாத், பசிர்ஹாட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமண்ட் ஹார்பர், தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.

    'முதல்வர்' என பெயர் பொறித்த இருக்கையை ஸ்டாலினுக்கு யாராவது வாங்கி கொடுங்க: சரத்குமார் 'முதல்வர்' என பெயர் பொறித்த இருக்கையை ஸ்டாலினுக்கு யாராவது வாங்கி கொடுங்க: சரத்குமார்

    கோஷம்

    கோஷம்

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் கொல்கத்தாவில் சாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சாலையில் இருந்த திரிணமுல் கட்சியை சேர்ந்த சிலர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    வன்முறை

    வன்முறை

    இதனால் திரிணமுல் மற்றும் பா.ஜவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கற்களை வீசுவது, வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.

    எரியுது வங்கம்

    எரியுது வங்கம்

    போலீசார் பலரை கைது செய்தனர். இந்த வன்முறையால் கொல்கத்தாவில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் கொல்கத்தா வன்முறை டிவிட்டரில் வைரலாகியுள்ளது. எரியுது வங்கம் (Bengal Burning) என கொல்கத்தாவில் நடக்கும் வன்முறை சம்பவங்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    அமைதிக்கு வேண்டுகிறேன்

    பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் மத்தியில் பாஜகதான் அடியாள். கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சிப்பதோடு கடும் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கா மமதா பானர்ஜி மாநிலத்தை காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கிறார். மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    அரசியல் தீவிரவாதம்

    மேற்குவங்கத்தில் சிபிஐக்கு தடை. பிரதமர் புயல் நிவாரண உதவிகளை செய்ய வந்தால் மமதா எந்த உதவியையும் எடுத்துக்கொள்ளாமல் உயிரை பணையம் வைக்கிறார். பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மமதா குறித்து மீம்ஸ் போட்டால் கைது செய்து விடுகிறார்கள். ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மமதா பானர்ஜி அரசியல் தீவிரவாதத்தை செய்து கொண்டிருக்கிறார்? இவ்வாறு பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    தேர்தல் ஆணையம்

    பாஜகவினர் தவறு செய்தால் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இதுதான் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    அப்புறம் நடிப்போம்

    மமதா பானர்ஜி
    ஸ்டெப் 1 - நாங்கள் கொலை செய்வோம், தொங்கவிடுவோம், அச்சுறுத்துவோம், கைது செய்வோம்.
    ஸ்டெப் 2 - பிறகு நாங்கள் சாட்சிகளாகவும் அப்பாவியாகவும் நடந்து கொள்வோம்.
    போலி மதச்சார்பற்ற தலைவர் என மமதாவுக்கு விருதுகள், மமதா ஒரு புனிதர், கடவுள், மோடி ஒரு ஹிட்லர், சர்வாதிகாரி. இப்படி மமதா பானர்ஜிதான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Bengal burning is trending on twitter. Violence in west bengal in election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X