For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது முறையாக அரியணையில் மம்தா..108 இடங்கள் வரை பாஜக.. ஏபிபி-யின் மேற்குவங்க தேர்தல் கருத்துக்கணிப்பு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Bengal Opinion Poll by abp Mamata Banerjee Likely To Return To Power, bjp storms

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் எப்படியாவது முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக மிகத் தீவீரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம், 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணாமூல் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில், ஏபிபி ( ABP) நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 148 - 164 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 92 - 108 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதான் உண்மையில் வியக்கும் தகவலாகும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில் வெறும் 3 இடங்களில் வென்ற பாஜக, 2021 சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட 102 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மையில் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

108-ஐ விடுங்க... 92 இடங்களில் பாஜக வென்றால் கூட, அது பாஜகவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிப் பெற்று, 3வது முறையாக மம்தா ஆட்சிக் கட்டிலில் அமர்வதை விட, பாஜக 92 இடங்களில் வெல்வதே மிக முக்கிய திருப்பமாக மேற்குவங்க அரசியல் வரலாற்றில் பதிவாகும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Bengal Opinion Poll by abp Mamata Banerjee Likely To Return To Power, bjp storms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X