90 வயசில் இதெல்லாம் தேவையா.. நச்சென விளக்கம் சொல்லி.. பத்மஸ்ரீ விருதை நிராகரித்த பிரபல பாடகி
கொல்கத்தா: இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை தனக்கு தேவையில்லை என புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளதை போலவே மற்றொரு பிரபலமும் அறிவித்துள்ளார்.. அவர் பெயர் சந்தியா முகர்ஜி..!
நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வருடா வருடம் வழங்கப்படுகிறது.
4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்
அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு நேற்றைய தினம் வெளியிட்டது.

பத்மவிபூஷன்
அதில், மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.. நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்..

விருது வேண்டாம்
இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. அதில், "பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது... அதைப்பற்றி யாரும் எனக்கு எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ஒருவேளை எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கவும் போவதில்லை" என்று கூறியிருந்தார்.. புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விருது வேண்டாம் என்று அவர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பட்டியல்
இதனிடையே, பட்டாச்சார்யாவை போலவே, சந்தியா முகர்ஜி என்பவரும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதினை நிராகரித்துள்ளார்.. மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகிதான் சந்தியா முகர்ஜி.. இவரது பெயரும் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தது.. விருது தனக்கு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார் சந்தியா முகர்ஜி.. இது குறித்து அவரது மகள் சவுமி சென் குப்தா கூறியதாவது:

பேத்தி விளக்கம்
"90 வயதில் இந்த விருது வழங்குவது தன்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி சொல்கிறார்.. பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது. அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார்... மற்றபடி, இந்த விருதை நிராகரிப்பதில் அவருக்கு எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கவுரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெற மறுக்கிறார்" என்றார் சவுமி சென் குப்தா.