For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒவ்வொரு மாதமும் 70 புதிய நோய்கள் தாக்குகிறது.. பெங்களூர் மக்களை விழிபிதுங்க வைக்கும் பிரச்சனை

பெங்களூர் மக்களை ஒவ்வொரு மாதமும் 70 புதிய நோய்கள் தாக்குகிறது என்று கணக்கெடுப்பு ஒன்று கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு- வீடியோ

    பெங்களூர்: பெங்களூர் மக்களை ஒவ்வொரு மாதமும் 70 புதிய நோய்கள் தாக்குகிறது என்று கணக்கெடுப்பு ஒன்று கூறியுள்ளது. வயது வித்தியாசம் பார்க்காமல் இந்த நோய் அனைவரையும் தாக்குகிறது.

    மாதம் 70ல் இருந்து 90 வரை இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு சரியான மருத்துவமும், பெயரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த நோய் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது. அறிகுறிகளும் என்னென்ன என்று கூறப்பட்டு இருக்கிறது.

    நோய்

    நோய்

    இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு மூட்டுகளில் மோசமான வலி ஏற்படும். அதேபோல் கால்களின் அடிப்பகுதி வீக்கம் ஆகும். முகத்தில் பெரிய பெரிய வீக்கங்கள் வரும். இந்த வீக்கங்கள் வடியாமல் அப்படியே இருக்கும். பேச்சு குளறும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    பலர் பாதிப்பு

    பலர் பாதிப்பு

    இதற்கு இப்போதைக்கு பெங்களூரில் மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக மக்கள் மட்டுமே இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு அதிகம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்ற வருடம் மட்டும் 800 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    காலம்

    காலம்

    இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம். சரியான மருத்துவமுறைகள் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் தொடர் சிகிச்சை மூலம் 7 வருடங்களில் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதற்காக மாத மாதம் ஊசி போட வேண்டும்.

    நிறைய

    நிறைய

    இதுகுறித்து அரிய வகை நோய்களுக்கான இந்திய அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதுபோல் உலகம் முழுக்க 7000 பெயரிடப்படாத நோய்கள் இருக்கிறது என்றுள்ளார்கள். இந்த நோய்கள் எல்லாமே குணப்படுத்த 7 வருடம் ஆகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Bengaluru affects by new kind of diseases everyday says report. 70-90 cases filled every month in this rare symptoms. It will take 7 years to cure the unnamed disease.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X