For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் மாயமான ஏடிஎம் பணம் ரூ.20 லட்சம் மீட்பு: டிரைவர் தப்பியோட்டம்; தனிப்படை தேடுதல் வேட்டை

பெங்களூரில் ஏடிஎம் பணம் ரூ20 லட்சத்துடன் மாயமான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பச் சென்ற வாகனத்துடன் டிரைவர் மாயமான வழக்கில், ரூ. 20 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது. தப்பிய வேன் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பணத்துடன் ஏடிஎம் வாகன டிரைவர் மாயமாவது இது இரண்டாவது சம்பவம்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிபின் ஹூசைன். இவர் பெங்களூரில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம், வங்கிகளிடம் பணத்தை பெற்று, ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இங்கு ஹூசைன் டிரைவராக பணியாற்றி வந்தார்.

Bengaluru: Another ATM driver flees with cash

இந்தநிலையில், சனிக்கிழமை வழக்கம்போல் வேனில் ஏ.டி.எம்களில் பணம் நிரப்ப புறப்பட்டுள்ளனர். அந்த வேனை ஹூசைன் ஓட்டியுள்ளார். மதியம் மடிவாலா பகுதியில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பியுள்ளனர். அங்கிருந்து மற்றொரு ஏடிஎம்மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த போது வண்டியில் இருந்த ரூ. 20 லட்சம் ரொக்கப்பணம், மற்றும் வாகனத்துடன் டிரைவர் மாயமானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், வாகனம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பன் ஹூசைனை தேடிவந்தனர். இந்நிலையில் யமலூர் என்ற இடத்தில் வாகனத்தை மீட்டர். அதிலிருந்த ரூ20 லட்சம் பணத்தையும் மீட்டனர். இரும்பு பெட்டியை உடைக்க முடியாததால் பணத்தை விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. மாயமான வாகன ஓட்டுநர் சிப்பன் ஹுசேனைத் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சென்ற ரூ.1.37 கோடி பணத்துடன் தப்பியோடிய டிரைவர் டோமினிக் செல்வராஜ் என்பவரை போலீஸார் சில நாட்களுக்கு பின்பு கைது செய்தனர்.

English summary
A driver attached to a private firm depositing money in ATMs fled with the van containing Rs 20 lakh cash on Saturday at Bengaluru's Wind Tunnel Road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X