For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலியை காண பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஏர் ஏசியாவில் பறக்கும் 180 'ஃபேன்கள்'

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: கபாலி படத்தை பார்க்க 180 ரசிகர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் நாளை பெங்களூரில் இருந்து சென்னை செல்கிறார்கள்.

கபாலி படத்தின் விளம்பரங்களுக்காக ஏர் ஏசியா நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தாணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ஏர் ஏசியா விமானங்களில் கபாலி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Bengaluru Fans to fly via Air Asia to Chennai for Kabali

கபாலி படத்தை வைத்து ஏர் ஏசியாவும் சில போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களை அறிவித்தது. கபாலியை வைத்து ஏர் ஏசியாவுக்கு நல்ல விளம்பரம் தான்டா என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை கபாலியின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க 180 ரசிகர்களுடன் ஏர் ஏசியா விமானம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறது. விமானத்தில் ரஜினிக்கு பிடித்த உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.

இதற்கிடையே ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து இரண்டு நாட்கள் கபாலி படத்தை 10 முறை பார்க்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

English summary
180 fans will travel to Chennai from Bengaluru on friday in a Air Asia flight to watch Kabali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X