For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ட்டிக்கு போக வேண்டாம் என்ற தாய்.. தற்கொலை செய்த பிளஸ் டூ மாணவி.. பெங்களூரில் சோகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பார்ட்டிக்கு அனுமதி மறுப்பு...மாணவி தற்கொலை- வீடியோ

    பெங்களூர்: பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று, தாய் தடுத்ததால், பிளஸ் டூ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூர் கெம்பேகவுடா நகர் நஞ்சப்பா லேஅவுட்டை சேர்ந்தவர், சந்திரசேகர், டிரைவர். இவர் மனைவி பெயர் சந்திரிகா. பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் டீச்சராக வேலை பார்க்கிறார். இத்தம்பதிகள் மகள் அர்ப்பிதா (17). பியூசி 2வது ஆண்டு (பிளஸ் டூ), படித்து வந்தார் அர்ப்பிதா. இப்போது அவருக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வந்தது.

    Bengaluru girl ends life after being told not to attend party

    இந்த நிலையில் தனது தோழி பிறந்த நாளையொட்டி நடைபெறும், கேக் கட்டிங் மற்றும் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று தனது தாய் சந்திரிகாவிடம் அர்ப்பிதா கேட்டுள்ளார். ஆனால் இது தேர்வு நேரம் என்பதால், பார்ட்டிக்கு போக வேண்டாம் என்றும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறும் அர்ப்பிதாவிடம் சந்திரிகா கூறியுள்ளார்.

    இதனால் கோபமடைந்த அர்ப்பிதா பார்ட்டிக்கு போயே தீருவேன் என அடம் பிடித்துள்ளார். சந்திரிகா கறாராக மறுப்பு கூறிவிட்டார். இந்த நிலையில், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். மதியம் முதல் இரவு 7 மணிவரை அறை கதவு திறக்கப்படவில்லை. சந்திரிகா தட்டிப் பார்த்தபோது பதில் வரவில்லை. எனவே பயமடைந்த அவர் கணவரை போன் செய்து அழைத்துள்ளார்.

    கார் ஓட்டிக்கொண்டிருந்த சந்திரசேகரும் அவசரமாக வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அர்ப்பிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று காண்பித்தபோது, அர்ப்பிதா ஏற்கனவே இறந்துவிட்டாதாக தெரிவித்துள்ளார்கள்.

    பார்ட்டிக்கு அனுப்பாமல் படிக்க கூறியதற்காக இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் அங்க்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A II PUC student committed suicide in Bengaluru after her mother refused to send her for a friend’s birthday party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X