• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறுந்தாடி பிரியரா?... கல்யாணம் பண்ணிக்க இந்துஜாவுக்கு அப்ளை பண்ணுங்க

By Mayura Akilan
|

பெங்களூரு: குறுந்தாடியரா? குழந்தைகளை வெறுப்பவரா? அப்போ பெங்களூரு என்ஜீனியர் பெண்ணுக்கு அப்ளை பண்ணுங்க! உடனே செலக்ட் ஆக வாய்ப்பு இருக்கு!

பெண்ணுக்கு வரதட்சனை கேட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போதோ திருமணத்திற்கு பெண் தேடி அலுத்துப் போகின்றனர். அருப்புக்கோட்டை உள்ளிட்ட சில ஊர்களில் 2 லட்சம் ரூபாய் வரை பெண் பெயரில் டெபாசிட் செய்தால்தான் பெண்ணே கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Bengaluru Girl Indhuja Stirs up Storm Launching Viral Matrimonial Ad for Guy who Hates Kids

மாப்பிள்ளைக்கு சொந்த வீடு.... நல்ல வேலை, கைநிறைய சம்பளம் இருக்கவேண்டும். திருமணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம் போக ரெடியாக இருக்கவேண்டும் என்று சிலபல கண்டிசன்கள் போட்டுத்தான் திருமணத்திற்கே ஒத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதனால் ஆண்பிள்ளைகளை வைத்திருப்பவர்களின் பாடு பெரும்பாடுவருகிறது.

இணையதளத்தில் தேடல்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம்.

தனக்கென ஒரு இணையதளம் ஆரம்பித்து மாப்பிளை தேடி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

பெற்றோர்கள் தேடிய வரன்

பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, சேலத்தில் வசிக்கிற பழமைவாதிகளான அவரது பெற்றோர், முன்னணி திருமண இணையதளம் ஒன்றில் வரன் தேடி சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டார்கள்.

Bengaluru Girl Indhuja Stirs up Storm Launching Viral Matrimonial Ad for Guy who Hates Kids

வடிவமைத்த வலைப்பக்கம்

மணமகன் தேடி வெளியிடப்பட்ட அந்த விளம்பரம் அவரை பாதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரே ஒரு விளம்பரத்தை வலைப்பக்கமாக வடிவமைத்தார்.

எக்கச்சக்க விசாரணைகள்

தான் எப்படிப்பட்டவர் என்றும், தனக்கு வரக்கூடிய வரன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அனைத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.இந்த வலைப்பக்கத்துக்கு விசாரணைகள் வந்து கொண்டே இருக்கின்றனவாம்.

2.5 லட்சம் பார்வையாளர்கள்

உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்தான். மூன்றே வாரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் அவரது வலைப்பக்கத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்களில் 11 ஆயிரம் பேர் ‘லைக்' போட்டு இருக்கிறார்கள்.

அறிமுகமே அமர்க்களம்

நான் மது அருந்த மாட்டேன்.. புகை பிடிப்பதை வெறுக்கிறேன்.. பேட்மிண்டன் விளையாடுவேன்.. ஆடுவேன்.. பாடுவேன்... கருப்பு கண்ணாடி அணிவேன்.. கஞ்சக்காரி அல்ல... ஷாப்பிங் அடிமையும் அல்ல. நட்புடன் பழகுவேன்.. ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் தரமாட்டேன்.. நான் திருமணத்துக்கான விளம்பரப் பொருள் அல்ல... வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்... இப்படி போகிறது, இந்துஜாவின் அறிமுகம்.

வரன் எப்படி?

குறுந்தாடி வைத்திருக்க வேண்டும்... அவருக்காக சம்பாதிக்க வேண்டும்... குழந்தைகளை வெறுப்பவருக்கு முன்னுரிமை... 30 நிமிடமாவது கலந்துரையாட தகுந்தவராக இருக்க வேண்டும்... இப்படி பல நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்.

இப்படி பண்ணலாமா?

ஆன்லைனில் இந்த வலைப்பக்கம் இப்போது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த பொண்ணுங்க பண்ற வேலையால மாமியாருங்க பாடு திண்டாட்டமா போயிரும் போல இருக்கே...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Engineer Indhuja Pillai aka IP, 23, whose parents started looking for a match by uploading her profile on a matrimonial site, with the details -- Tamilian, single child, 5 feet 4 inches, vegetarian, earning and so on.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more